கட்டுரையாளர் - மௌலானா முஹம்மது ஃபாரூக் காஷிஃபி.
நன்றி : மனாருல் ஹுதா மாத இதழ் - 2010
(நிதாயே ஷாஹி
ஜூலை 2009-ல் வந்த மௌலானா
இஃஜாஸ் அஹ்மது ஸாஹிப் அவர்களின் கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.)
கடன்... இம்மூன்றெழுத்தில் பலரின் மூச்சே நின்றுபோயுள்ளது. அந்தளவு
மிக கொடுமையானதாக இக்காலத்தில் இது ஆகிவிட்டது. ஆனால் உண்மையில் கடன் மிகவும் நல்லதொரு
விஷயம். மனிதர்கள் எல்லோரும் கடனின் பால் தேவையுடையோரே. கடன் இன்றி மனிதர்கள் ஒவ்வொருவரும்
தத்தமது தேவைகளை பூர்த்தி செய்வது என்பது அரிதிலும் அரிது. இன்னும் சொல்வதென்றால் எந்தளவு
செல்வம் இருக்குமோ அந்தளவு கடனின் பால் அவன் தேவையுடையவனாக இருப்பதே நிதர்சனம். மூச்சை
நிறுத்துமளவு ஆனதற்கு காரணம் அதுவல்ல. மாறாக அதில் ஏற்படும் வட்டியாகும். ஆக கடன் பெறுவதையும், கடன் கொடுப்பதையும்
இஸ்லாம் அங்கீ கரித்த்திருப்பதுடன் பல சந்தர்ப்பங்களில் அதனை சிலாகித்தும் கூறியுள்ளது.
கடன் பெறுவதைப் பற்றி
ஒரு ஹதீஸில் இவ்வாறு வந்துள்ளது. ஹள்ரத் ஆயிஷா நாயகி (ரலி) அவர்களிடம் தாங்கள் ஏன்
கடன் பெறுகிறீர்கள் என்று கேட்கப்பட, அவர்கள் “எவர் கடனை நிறைவேற்றும் எண்ணத்துடன்
இருப்பாரோ அவ ருக்கு அல்லாஹுதஆலாவின் உதவி இருக்கும்” என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
கடன் கொடுப்பதைப்பற்றி
“தர்மம் செய்தல் பத்து மடங்கு நன்மை கொடுக்கும் கடன் கொடுத்தல் பதினெட்டு மடங்கு
நன்மை கொடுக்கும்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
நவின்றுள்ளார்கள்.
எனினும் கடன் என்பது
பெரும் மனச்சுமையை ஏற்படுத்தும் என்பதில் சந் தேகமில்லை. எனவே தான் “கடன் பட்டார்
நெஞ்சம் போல் கலங்குதே நெஞ்சம்” என்று நம் முன்னோர் சொல்லியுள்ளனர்.
கடன் பெற்றவர் கடனை
நிறைவேற்றுவதில் தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்ய வேண்டும். தன்
உடலுழைப்புகள், தொழில்கள், வியாபாரங்கள் போன்றவற்றை கையாள வேண்டும்.
இவ்விஜயங்களில் கடன் பெற்ற பலர் திருப்பி செலுத்த முயற்சிப்பதை கண்கூடாக நாம்
காணலாம். ஆனால் இதையும் தாண்டி வேறொரு முயற்சி இருக்கிறது. அதில் பலர் கோட்டை
விட்டுள்ளனர். அது தான் இறைவனிடம் மன்றாடிப் பெறும் முயற்சி.
உலகில் ஏற்படும்
எந்தவொரு விஷயமும் வானுலக தொடர்புடனேயே இருக்கிறது. மனிதன் இதுவரை அவ்வுலக தொடர்பை
எத்தாவிடிலும் நல் அமல்களும், நற்
பிரார்த்தனைகளும் வானுலகிற்கு எத்தவே செய்கின்றன. இவையே மனிதனுக்கான வானுலக
தொடர்பு சாதனங்களாகும். எனவே கடன் போன்ற பெரும் சுமையான விஷயத்திற்கான தீர்வு
வானுலக பொக்கிஷங்களில் உள்ளது. அதனைப் பெற மனிதன் பிரார்த்தனை, மன்றாடுவது என்ற சாதனங்களை பயன்படுத்துவது மிக
அவசியமாகும்.
எனவே தான் கடன்
வாங்குவதை அங்கீகரித்த இஸ்லாம் அதற்கான வானுலக தீர்வு பொக்கிஷத்தை அடைய பல
பிரார்த்தனை மன்றாடுதல் என்ற சாதனங்களை மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
திருவாய் மூலமாக நமக்களித்துள்ளது. இச்சாதனங்களை பயன்படுத்தி பலர் பயன்பெற
வேண்டும் என்ற நன்னோக்கில் அச்சாதனங்களில் சிலதை பகிர்ந்தளிக்க நாடுகிறோம்.
1. அமீருல் முஃமினீன்
ஹள்ரத் அலி (ரலி) அவர்களிடம் “இவ்வளவு தொகை செலுத்தினால் விடுதலை என விடுதலைப்
பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமையொருவர் வந்து என்னால் நிர்ணயிக்கப்பட்ட
தொகையை நிறைவேற்ற முடியாமல் ஆகிவிட்டது. எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார்.
அச்சமயம் ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் நான் உமக்கு சில வாசகங்களை கற்றுக்
கொடுக்கிறேன். அவ்வாசகங்களை எனக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கற்றுக் கொடுத்து உம்மீது ஸபீர்” (ஒருமலையின் பெயர்) மலையின் அளவு கடன் இருப்பினும்
அல்லாஹுதஆலா அக்கடனை நிறைவேற்றி வைப்பான் என்று கூறினார்கள். அதனை நீரும் ஓதுவீராக
என்று
قُلِ اللَّهُمَّ اكْفِنِى بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ
وَأَغْنِنِى بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
யாஅல்லாஹ்! ஹராமை
விட்டும் என்னைக் காப்பாற்றி ஹலாலான ரிஸ்கை அளித்து என்னை போதுமாக்கிவை.
உன்னையன்றி பிறரிடம் தேவையாகுவதை விட்டும் என்னை உன் அருள் மூலம் ஈடேற்று!) என்ற
துஆவை கற்றுக் கொடுத்தார்கள். (நூல் : திர்மிதீ)
ஒரு மனிதர் உண்மை
உள்ளத்துடன் இப்பிரார்த்தனையை செய்தால் அவர் கடன் கண்டிப்பாக நிறைவேறும். காலை -
மாலை 40 முறை ஓதுவது நல்லது.
2. அபூ சயீது குத்ரீ (ரலி)
அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மஸ்ஜிதிற்குள் நுழைந்த போது அபூ உமாமா (ரலி) என்ற தோழர் வாடிய முகத்துடன்
அமர்ந்திருந்ததை கண்டு என்ன அபூ உமாமா இந்நேரத்தில் இங்கு? என்று வினவினார்கள். அதற்கவர் அல்லாஹுதஆலாவின்
தூதரே! கடன் அதிகமாகி பெரும் சிரமத்திற்குள் பீடிக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்.
உடனே அல்லாஹுதஆலாவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் உமக்கு ஒரு
துஆவை கற்றுக் கொடுக்கட்டுமா? அதனை
ஓதினால் உன் சிரமங்கள் நீங்கும், கடனும்
நிறைவேறும் என்று கேட்க அவசியம் கற்றுக் கொடுங்கள் என்று அத்தோழர் கூறினார். உடனே
அல்லாஹுதஆலாவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் காலையிலும்
மாலையிலும்
اللَّهمَّ إني أعوذ بك من الهَمِّ والحَزَنِ ، وأعوذُ بك من العجْزِ والكَسَلِ،
وأَعوذُ بك من البخْلِ والجُبْنِ ، وأعوذ بك من غَلَبَةِ الدَّيْنِ وقَهرِ الرجال
யாஅல்லாஹ் நான் உன்னிடம்
கவலைகள், துக்கங்களை விட்டும்
பாதுகாப்பு தேடுகிறேன். மேலும் இயலாமை, சோம்பலை
விட்டும் பாதுகாவல் கோருகிறேன். மேலும் கஞ்சத்தனம், கோழைத்தனத்தை விட்டும் பாதுகாவல் கோருகிறேன். மேலும் கடன்
பளுவையும், மனிதர்களின் அடக்கு
முறைகளையும் விட்டும் பாதுகாவல் கோருகிறேன் என்று கூறுவீராக! என்றார்கள்.
ஹள்ரத் அபூ உமாமா
கூறுகிறார்கள். நான் இதனை ஓத ஆரம்பித்ததும் அல்லாஹ் என் சிரமங்கள் கடன்
அனைத்தையும் நீக்கிவிட்டான்.
இதனை காலை மாலை 33 தடவைகள் ஓதுவது இறையருளை கிட்டச்செய்யும்.
3. ஹள்ரத் முஆத் இப்னு ஷபல்
(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஒருமுறை ஜும்ஆ தினத்தன்று என்னை தேடினார்கள். ஜும்ஆ தொழுகைக்குப் பின் என்
வீட்டிற்கே வந்து முஆதே உம்மை இன்று நான் காணவில்லையே என்றார்கள். நான், அல்லாஹுதஆலாவின் தூதரே! நான் ஒரு யூதனுக்கு கடன்
கொடுக்க வேண்டும். நான் தங்கள் சமூகத்திற்கு வர நினைத்த போது அவன் என்னை
தடுத்துவிட்டான் என்றேன். உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்
உமக்கு துஆ கற்றுக் கொடுக்கிறேன். அதனை ஓதிவந்தால் உம்மீது ஸபீர் (எனும்) மலையின்
அளவு கடன் இருப்பினும் அதனை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்று கூறியவர் களாக முஆதே
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي
الْمُلْكَ مَنْ تَشَاءُ، وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ، وَتُعِزُّ مَنْ تَشَاءُ،
وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكِ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، تُولِجُ
اللَّيْلَ فِي النَّهَارِ، وتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ، وَتُخْرِجُ الْحَيَّ
مِنَ الْمَيِّتِ، وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ، وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ
حِسَابٍ رَحْمَنَ الدُّنْيَا وَالآخِرَةِ وَرَحِيمَهُمَا، تُعْطِي مَنْ تَشَاءُ مِنْهُمَا،
وتَمْنَعُ مَنْ تَشَاءُ، ارْحَمْنِي رَحْمَةً تُغْنِيني بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ
“யாஅல்லாஹ்! நீயே
அரசர்க்கரசன்! நீ நாடியோருக்கு ஆட்சியை கொடுக்கிறாய்! நீ நாடியோரிடமிருந்து
ஆட்சியை எடுக்கிறாய்! நீ நாடியவருக்கு கண்ணிய மளிக்கிறாய்! நீ நாடியோரை இழிவடையச்
செய்கிறாய்! நலவெல்லாம் உன் கைவசமே உள்ளது. நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
நீ பகலில் இரவை புகுத்துகிறாய்! இரவை பகலில் புகுத்துகிறாய்! உயிரற்றதிலிருந்து
உயிருள்ளதை வெளியாக்கு கிறாய்! உயிருள்ளவற்றிலிருந்து உயிரற்றதை வெளியாக்குகிறாய்!
நீ நாடியோருக்கு கணக்கின்றி கொடுக்கிறாய்! ஈருலக நாயனே! இரு உலகிலும் நீ
நாடியோருக்கு வழங்குகிறாய்! இரு உலகிலும் நீ நாடியோருக்கு தடுக்கின்றாய்! நீயின்றி
பிறர் என் மீது இரக்கம் கொள்வதை விட்டும் தேவையுறச் செய்யக்கூடிய அளவு உன்
கிருபையை எனக்களிப்பாயாக! (நீ அருள்புரிவாயாக!) யா அல்லாஹ் ஏழ்மையை நீக்கி எனக்கு
செழிப்பைக் கொடு, என் கடனை நிறைவேற்று!
உன் வணக்கத்தில், உன் பாதையில் போராடும்
நிலையில் என்னை மரணிக்கச் செய்!” என்று கூறுவீராக என்றார்கள். (நூல் : தப்ரானீ)
இந்த துஆ மிகவும் சக்தி
வாய்ந்த துஆவாகும். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் இதை ஒரு முறை ஓதிவாருங்கள்.
4. ஹள்ரத் ஆயிஷா (ரலி)
அவர்கள் கூறுகிறார்கள் : ஒருமுறை என் தந்தை யார் ஹள்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி)
அவர்கள் என்னிடம் வந்து எனக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு
துஆ கற்றுத் தந்துள்ளார்கள் என்றார்கள். நான் என்ன துஆ என்று கேட்க அது ஹள்ரத் ஈஸா
(அலை) அவர்கள் தம் தோழர்களுக்கு கற்றுக் கொடுத்த துஆவாகும். ஒருவருக்கு மலையளவு
தங்கம் கடனாக இருந்தாலும் அவர் இந்த வார்த்தைகள் மூலம் துஆ கேட்டால் அல்லாஹுதஆலா
அதனை நிறைவேற்றுவான் என்றார்கள். அந்த துஆவாவது :
اللَّهُمَّ فَارِجَ الْهَمِّ وَكَاشِفَ الْكَرْبِ ، مُجِيبَ
دَعْوَةِ الْمُضْطَرِّينَ ، رَحْمَنَ الدُّنْيَا وَالآخِرَةِ ، أَنْتَ رَحْمَانِي فَارْحَمْنِي
رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ مَنْ سِوَاكَ
யாஅல்லாஹ்! கவலைகளை நீக்குபவனே!
துக்கங்களை அகற்றுபவனே! திக்கற் றவர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவனே! இம்மை
மறுமையின் அளவற்ற அருளாளனே! ஈருலகின் நிகரற்ற அன்புடையோனே! நீயே எனக்கு கிருபை
செய்பவன். உன்னையல்லாது பிறர் என் மீது இரக்கப்படுவதை விட்டும் தேவையுறச் செய்யும்
அளவு என்மீது நீ அருள்புரிவாயாக!
இன்னும் பல துஆக்கள் இருக்கிறது. அதற்கு முன்; என்ன
இப்படியெல்லாம் துஆ செய்துவிட்டால் வாங்கிய கடன் தானாக அடைந்துவிடுமா? நாம் முயற்சி
செய்து சம்பாதித்தால்தானே அடைக்க முடியும்?
என்றெல்லாம் மனதில் ஊசலாடலாம்! ஆனால் உண்மை என்னவெனில் மனிதன் எவ்வளவு பெரிய
முயற்சி செய்தாலும் அவனின் முயற்சியை மிகைக்கும் பல விஷயங்கள் அவனை கடனாளியாகவே
வைத்துவிடும். வல்ல அல்லாஹுதஆலாவின் உதவியின்றி எம்முயற்சியும் பயனளிக்காது. எனவே
நாம் இந்த துஆக்களை கேட்டுப் பெற வேண்டும்.
அதுபோல் பலர் இந்த துஆக்களை ஓதியும் தங்களுக்கு எந்த பயனும்
ஏற்படவில்லையே என்றெண்ணலாம். ஆனால் இந்த துஆக்களை ஓதுவது என்பது வெறும் உதட்டை
அசைத்து நாவால் மொழிவதல்ல. மாறாக ஓதுவதுதன் நோக்கம் “கேட்டுப் பெறுவது” அதாவது
வல்ல அல்லாஹ்விடம் தம் இயலாமையை வெளிப் படுத்தி அவனின் வல்லமையை ஏற்றுக் கொண்டு
அவனையன்றி எனக்கு யாரும் இல்லையென்பதை மனதில் கொண்டு இந்த இரைஞ்சுதலை அவன் ஏற்பான்
என்று உறுதி கொண்டு கண்டிப்பாக இதன் மூலம் என் கடன்கள் கஷ்டங்கள் இன்ன பிற விஷயங்கள்
அனைத்தும் நிறைவேறும் என்று முழுமையான முறையில் நம்பி கேட்டுப் பெறுவதாகும்.
இத்தகைய முறையில் நாம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். அதற்குச் சான்றாக பல
சம்பவங்கள் உள்ளன.
முன்னால் குறிப்பிடப்பட்ட துஆவை அறிவித்த பின்னர் ஹள்ரத் அபூபக்ர்
(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “எனக்கு சில கடன்கள் இருந்தன. கடன் எனக்கு
கஷ்டமானதாக இருந்தது. எனவே நான் அல்லாஹ்விடம் இந்த துஆ மூலம் இறைஞ்சினேன்.
அல்லாஹுதஆலா என் கடன்கள் முழுவதும் அடையும் அளவிற்கு எனக்கு அருள்புரிந்தான்.”
அந்த துஆவினால் உடனே நிறைவேறிய கடன்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நாள் ஹள்ரத்
அஸ்மா பின்த் உமைஸ் அவர்களுக்கு ஒரு தீனாரும் மூன்று திர்ஹம்களும் கடன்
பட்டிருந்தேன். அவர்கள் எப்போதாவது என்னிடம் வந்தால் அவர்களின் முகத்தில் விழிக்க
எனக்கு அசிங்கமாக இருக்கும். ஏனெனில் அதை நிறைவேற்றும் வழியற்று இருந்தேன்.
பின்னர் இந்த துஆவைக் கொண்டு நான் துஆ செய்தேன். கொஞ்ச நேரம் தான் கழிந்தது.
அதற்குள் அல்லாஹுதஆலாவின் கிருபை வந்துவிட்டது. வந்த பணம் தர்மமும் அல்ல, வாரிசுரிமையும்
அல்ல. ஆக அல்லாஹுதஆலா என் கடனை நிறைவேற்றிவிட்டான். நான் என் குடும்பத்தாருக்கு
நிறைய பங்கிட்டு கொடுத்தேன். என் சகோதரர் அப்துர் ரஹ்மானின் மகளுக்கு நகைகளும்
செய்தேன். அப்படியும் நிறைய மீதம் இருந்தது. (நூல் : பஜ்ஜார், ஹாகிம்)
இந்த துஆவை மனனமிடுவது அதன் கருத்துக்களை நினைவில் கொள்வது
கடினமா என்ன? இது
இலகுவிற்கான சாவியாகும். அல்லாஹ்வின் கிருபையின் மீது உறுதி ஏற்பட்டுவிட்டால் அதன்
பலனை கண்கூடாக காணலாம்.
துஆ எண் 5
: ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எந்த ஒரு துன்பத்தில் பீடிக்கப்பட்டவராக
இருப்பினும் அவர்
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، وَابْنُ عَبْدِكَ، وَابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ بَصَرِي، وَجِلاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي، إِلا أَذْهَبَ اللَّهُ هَمَّهُ، وَأَبْدَلَهُ مَكَانَ حُزْنِهِ فَرَحًا، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَفَلا نَتَعَلَّمُ هَذِهِ الْكَلِمَاتِ؟ قَالَ:بَلْ بَلَى، (يَنْبَغِي لِمَنْ سَمِعَهُنَّ أَنْ يَتَعَلَّمَهُنَّ.(الطبراني في الكبير
10198
யாஅல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமையின் மகன். உன்
அடிமைப் பெண்ணின் மகன். என் முன் நெற்றி உன் கைவசம் உள்ளது. உன் கட்டளை என் விஷயத்தில்
நிறைவேறக் கூடியதாகவே உள்ளது. என் விஷயத்தில் உனது தீர்ப்பு நீதமானதே! (எனவே
யாஅல்லாஹ்!) நான் உன்னிடம் உனக்கு நீ சூட்டிக் கொண்ட உன் பெயர்களுக்காகவும் உனது
வேதங்களில் நீ இறக்கியருளிய உன் பெயர்களுக்காகவும், உன் அடியார்களுக்கு நீ கற்றுத்தந்த உன் பெயர்களுக்காகவும், உன் மறை வான
ஞானத்தில் தன்னகத்தே வைத்துக் கொண்ட பெயர்களுக்காகவும் (அவற்றின் பொருட்டால்)
வலுப்பமான குர்ஆனை என் உள்ளத்திற்கான வசந்தமாகவும் என் கவலைகளை நீக்கக்
கூடியதாகவும் என் சஞ்சலத்தை போக்கக் கூடியதாகவும் என் பார்வையின் ஒளியாகவும்
ஆக்குவாயாக!”
என்று துஆ செய்தால் அவரின் அனைத்து கஷ்ட நஷ்டங்களையும், கவலை
சஞ்சலங்களையும் அல்லாஹ் நீக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்துவான் என்றார்கள்.
அச்சமயம் ஸஹாபாக்கள் இக்கலிமாக்களை நாங்கள் கற்றுக் கொள்வது
நல்லது தானே என வினவிய போது சந்தேகமின்றி இதைப் பற்றி கேள்விப்படுபவர் இதனை மனதில்
நினைவில் கொள்ள வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்
என்றார்கள்.
(நூல் : தப்ரானீ)
இவை இறையருளை பொழியச் செய்யக்கூடிய ஆழ்ந்த கருத்துக் கொண்ட
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாயிலிருந்து வெளிப்பட்ட வாசகங்களாகும்.
இவற்றை மனனமிட்டு இறை சந்நிதானத்தில் முன்வைப்பது பெரும் பாக்கியமாகும்.
துற்பாக்கியசாலி
இமாம் தப்ரானீ (ரலி) அவர்கள் மேற்கூறிய துஆவை அபூமூஸா
அஷ்அரீ (ரலி) அவர்களின் வாயிலாகவும் அறிவித்துள்ளார்கள். அதன் இறுதியில் வருவதாவது
: ஒரு சஹாபி (ரலி) இந்த துஆவை கேட்டதன் பின்னர் “அல்லாஹ்வின் தூதரே! சந்தேகமின்றி
துர்பாக்கியசாலி எவன் இந்த வாசகங்களை விட்டும் இந்த துஆவை விட்டும்
விலக்கப்பட்டவனாக ஆகிவிட்டானோ அவனே தான் என்று கூறினார். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களும் ஆம்! இதனை நன்கு ஓதுங்கள். பிறருக்கும் கற்றுக் கொடுங்கள் திண்ணமாக எவர்
இந்த துஆவை ஓதுவாரோ, இந்த
துஆவை பிறருக்கு கற்றுக் கொடுப்பாரோ அவரின் துன்பங்கள், நிம்மதியின்மைகளை
அல்லாஹ் தூரமாக்கிடுவான். அவருக்கு மட்டற்ற மகிழ்வை உண்டாக்குவான் என்று
நவின்றார்கள். (நூல்: மஜ்மவுஸ் ஸவாயித் - 17130)
இந்த பெரும் சுபச் செய்திக்குப் பின்னரும் இந்த துஆவை
விட்டும் விலக்கப் பட்டவர் பெரிய துர்பாக்கியசாலி என்பதில் என்ன சந்தேகம்?!
துஆ எண் 6
: ஹள்ரத் அபூபக்ரஹ் (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள் :
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
" دَعَوَاتُ الْمَكْرُوبِ اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلاَ تَكِلْنِى إِلَى نَفْسِى طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِى شَأْنِى كُلَّهُ لاَ ِالَه (إِلاَّ أَنْتَ ( ابوداود عن ابي بكرة رضي الله عنه5092)
“யாஅல்லாஹ்!
நான் உன் ரஹ்மத்தையே ஆதரவு கொண்டுள்ளேன்! எனவே (கணபொழுதும்) கண் சிமிட்டும்
நேரத்திலும் கூட என்னின் பாலே (என் நஃப்ஸ்-ன் பாலே) என்னை விட்டுவிடாதே! என்
நிலைகள் அனைத்தையும் சீர் செய்வாயாக! உன்னையன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை”
என்ற துஆவை பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் துன்பத்திலும்,
கவலையிலும் உள்ளவருக்கான கலிமாக்களாகும் என்று கூறினார்கள். (நூல் : அபூதாவூத்-5092)
துஆ எண் 7
: ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அருளினார்கள் : எவர் “இஸ்திஃபார் (பாவமன்னிப்பு தேடுவதை) பற்றிப்
பிடிப்பாரோ அவருக்கு அல்லாஹுதஆலா அனைத்து விதமான நெருக்கடிகளிலிருந்தும்
வெளியேறும் வழியையும் ஏற்படுத்துவான். துன்பத்தை விட்டும் நீக்கி மகிழ்வை
ஏற்படுத்துவான். கஷ்ட நஷ்டங்களை விட்டும் பாதுகாப்பளிப்பான். அவர் நினைத்துப்பாரா
விதத்தில் அவருக்கு உணவளிப்பான். (அபூதாவூத்-1520)
இஸ்திஃபார்-ருக்கான கலிமாத்துகள் (வாக்கியங்கள்) ஹதீஸ்களில்
நிறையக் காணக் கிடைக்கின்றன. அவற்றில் ஐந்து வகையான வாக்கியங்கள் வருமாறு :
1. யாஅல்லாஹ்!
நிச்சயமாக நான் உன்னிடம் அனைத்து விதமான பாவங்க ளிலிருந்தும் மன்னிப்புக்
கோருகிறேன்.
اللهم إنى أستغفرك من كل ذنب
2. வணக்கத்திற்குரிய
நாயனும் நித்திய ஜீவனும் என்றும் நிலையானவனுமான அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு
கோருகிறேன். அவன்பாலே தவ்பா செய்(து மீளு)கிறேன்.
أستغفر الله الذي
لا إله إلا
هو الحي القيوم
، واتوب إليه
3. யாஅல்லாஹ்!
என்னை மன்னித்து எனக்கு கிருபை புரிந்து எனக்கு மீட்சி யருளுவாயாக! நிச்சயமாக நீயே
மீட்சி தருபவனும் மிக கிருபையாளனுமாவாய்!
اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
4. யாஅல்லாஹ்!
நிச்சயமாக நீ மன்னிப்பவன்,
மன்னிப்பை விரும்புபவன். எனவே என்னை மன்னித்தருள்.
اللهم إنك عفو
تحب العفو فاعف
عني
5. யாஅல்லாஹ்!
நீயே என் இரட்சகன். உன்னையன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என்னை
படைத்தாய். நான் உன் அடிமை. நான் என்னால் முடிந் தளவு உன்னிடம் செய்துகொண்ட
ஒப்பந்தம், வாக்குறுதிகளில்
நீடித்திருக்கிறேன்.
நீ என் மீது புரிந்த உபகாரங்களை ஏற்றுக் கொள்கிறேன். நான்
செய்த அனைத்து பாவங்களையும் (உன்னிடம்) ஒப்புக் கொள்கிறேன். எனவே என்னை
மன்னிப்பாயாக! ஏனெனில் நிச்சயமாக உன்னையன்றி பாவங்களை மன்னிப்போன் எவருமில்லை.
நான் செய்துவிட்ட (குற்றங்குறைகள் பாவங்கள் ஆகிய)வற்றை விட்டும் உன்னிடம்
பாதுகாவல் கோருகிறேன்.
5شَدَّادُ بْنُ أَوْسٍ -
رضى الله عنه -
عَنِ النَّبِىِّ -
صلى الله عليه وسلم -
" سَيِّدُ الاِسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّى ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِى وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوءُ بِذَنْبِى ، اغْفِرْ لِى ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
" . قَالَ
" وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا ، فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِىَ ، فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهْوَ مُوقِنٌ بِهَا ، فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ ، فَهْوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ
" . طرفه
6323 - تحفة
4815-بخاري
இந்த ஐந்து வாக்கியங்களை ஈமான் கொண்டோர் மனனமிடுவதில் என்ன
கடினம் ஏற்பட்டுவிடப்போகிறது?
எனவே இவற்றை மனனமிட்டுப் பல்வேறு சமயங்களில் இறை சந்நிதானத்தில்
விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ஐந்தாவதாக உள்ள இஸ்திஃபார் “ஸையிதுல் இஸ்திஃபார்”
(பாவமன்னிப்புக் கோரலில் தலையானது) என்ற சிறப்பு பெயர் பெற்றதாகும். மிகவும்
வலுவானதாகும். இதனைப் பற்றி காலையில் ஓதுபவர் அந்த பகலில் இறந்துவிட்டால், மாலையில் ஓதி
அன்றைய இரவில் மரணித்து விட்டால்,
அவர் சுவனவாசி என்று ஹதீஸில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. (நூல் : புகாரி)
துஆ எண் 8
: ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரசூலுல்லாஹி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள் எவர்
لا إله إلا الله قبل كل شيء، ولا إله إلا الله بعد كل شيء، ولا إله إلا الله يبقى (ويفنى كل شيء، عوفي من الهم والحزن".(
مجمع الزوائد
17134
“அனைத்திற்கும்
முன்பும் லாயிலாஹ இல்லாஹு,
அனைத்திற்கு பின்பும் லாயிலாஹ இல்லல்லாஹு, எங்கள் இறைவன் என்றும் நிரந்தரமானவன். எல்லா வஸ்துக்களும்
அழியக் கூடியது லாயிலாஹ இல்லல்லாஹு” என்று கூறுவாரோ அவர் அனைத்து துன்பங்கள்
கவலைகளை விட்டு பாதுகாக்கப்படுவார். (நூல்: தப்ரானீ-10542 மஜ்மஃ-17134)
ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் நவின்றார்கள் : எவர் “லா ஹவ்ல வலா குவத்த இல்லாபில்லாஹி” சொல் வாரோ அவருக்கு அது 99 நோய்களுக்கு
நிவாரணமாகும். அதில் ஆக குறைந்த பட்சம் மன அழுத்தம் நீங்கிவிடும்.
துஆ ஏற்றுக்கொள்ளப்பட்ட...
நாம் செய்யும் துஆ கபூலாக வேண்டுமென்றால் அதற்கான சில
ஒழுக்கங்களை பேண வேண்டும். 1.
முதலில் அல்லாஹ்வை வாயார மனதாரப் புகழ வேண்டும். 2. கண்டிப்பாக என்
துஆவை அல்லாஹ் ஏற்பான் அவன் வெறுங்கையாக அனுப்புபவன் அல்ல என்று உறுதி கொண்டு
கேட்க வேண்டும். 3. துஆவின்
ஆரம்பத்திலும் நடுவிலும் இறுதியிலும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஸலாம் கூற வேண்டும்.
4. தம் பாவத்தை
நினைத்து வருந்த வேண்டும். 5.
உளூ செய்து, இரு
கரமேந்தி கண்ணீர் மல்க கேட்க வேண்டும். 6.
சப்தத்தை தாழ்த்தி கெஞ்சி மன்றாடிக் கேட்க வேண்டும். 7. ஹராமான
சம்பாத்தியம், உணவு, குடிப்பு
போன்றவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ளவேண்டும். 8. துஆ கபூலாகும் நேரங்கள் என ஹதீஸ்களில் சொல்லப்பட்ட ஃபர்ளு
தொழுகைக்குப் பின்னர், பாங்கு
சொல்லப் படும் போது, பாங்கிற்கும்
இகாமத்திற்கும் இடைப்பட்ட சமயம்,
இரவின் பிற்பகுதி, ஜும்ஆ
நாள், அரஃபா
நாள், மழை
பொழியும் சமயம், ஸஜ்தாவில், நோன்பு திறக்
கின்ற சமயம் இது போன்ற நேரங்களை பேணி துஆ செய்வது. 9. என் துஆ இன்னும் கபூலாகவில்லையே என அங்கலாய்க்காமல்
இருப்பது.
இப்படியெல்லாம் நாம் துஆ செய்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக
நம் துஆ கபூலாகும்!
உலகில் வேண்டியது கிடைக்காதோரே!!
உலகில் நாம் கேட்கும் துஆ நிறைவேறாமல்போகுவதாலோ, வேண்டியது
கிடைக்காமல் போகுவதாலோ நம் துஆ கபூலாகவில்லை என எண்ணம் கொள்ளத் தேவையில்லை. ஒரு
ஹதீஸ் குதுஸியில் அல்லாஹுதஆலா கூறுவதை கேளுங்கள் : அல்லாஹுதஆலா ஓர் அடியானை மறுமை
நாளில் அழைத்து என் அடியானே! நான் என்னிடம் துஆ செய் என்று சொன்னேனே! நான்
பதிலளிக்கிறேன் என்றும் சொன்னேனே நீ துஆ செய்தாயா? என்று கேட்பான். அதற்கு அவ்வடியான் ஆம் நான் கேட்டேன்
என்பான். அப்போது அல்லாஹுதஆலா கூறுவான் உனக்கு இன்ன நாளில் நீ விரும்பாத இன்ன இன்ன
விஷயம் ஏற்பட்டபோது நீ என்னிடம் துஆ கேட்டாய். நான் உனக்கு அதனை உலகிலேயே உடனடியாக
தீர்த்து வைத்தேன் அல்லவா?
என்பான். அதற்கு அடியான் ஆம் என்பான் பின்னர் அல்லாஹு தஆலா நீ இன்ன இன்ன விஷயத்தில்
என்னை அழைத்து துஆ கேட்டாய். நான் அதனை உனக்கு நிறைவேற்றவில்லை. அதனை உனக்கு
சுவனத்தில் சேமிப்பாக சேர்த்து வைத்துள்ளேன் என்று கூறுவான். அதுபோது அடியான்
(அதனைக் கண்ணுற்று) தனக்கு உலகில் ஒரு துஆவிற்கும் பதிலளிக்கப்படாமல் இருந்திருக்க
வேண்டுமே என்று கூறுவான். (ஹில்யதுல் அவ்லியா- ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)
மற்றறொரு ஹதீஸில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
எந்த ஒரு முஸ்லிமும் பாவமான காரியமின்றி உறவு முறையை துண்டித்தலன்றி துஆ செய்வானேயானால்
அல்லாஹுதஆலா அதற்காக ஏதேனும் மூன்றில் ஒன்றை கொடுத்தே தீருவான்.
1. அவன்
கேட்டதை உலகிலேயே உடனடியாக கொடுப்பான்.
2. அல்லது
மறுமையில் அதனை சேமித்து வைப்பான்.
3. அல்லது
அதுபோன்றதொரு துன்பத்தை அவனை விட்டும் நீக்குவான்.
இந்த ஹதீஸை செவிமடுத்த ஸஹாபாக்கள் அப்படியானால் நாங்கள்
(பிரார்த்த னைகளை) அதிகம் செய்வோம் என்றனர். அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அல்லாஹு தஆலா மிக அதிகம் உடையவன் தருபவன் என்றார்கள். (அஹ்மது)
இனி துஆக் கேட்கலாம் வாங்க...
துஆ எண் 10
: ஹள்ரத் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என்னிடம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் “நான் உமக்கு சில வாக்கியங் களை கற்றுக் கொடுக்கிறேன்.
அதனை வாழ்வியல் நெருக்கடி துன்பங்கள்,
கவலைகளின் போது ஓதிவா என்று கூறி اللَّهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا அல்லாஹு. அல்லாஹு தஆலாவே என் இறைவன் நான்
அவனுக்கு யாதொரு பொருளையும் இணையாக்க மாட்டேன்.” என்பதை கற்றுக் கொடுத்தார்கள். (அஹ்மது)
இமாம் தப்ரானீ (ரலி) அவர்கள், கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலி)யின் மரணத் தருவாயில்
கடைசி வார்த்தை இதுவாகவே இருந்தது என பதிவு செய்துள்ளார்கள். (நூல் : தப்ரானீ அவ்ஸத்)
துஆ எண் 11
: ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் துன்பங்கள் கஷ்டங்களின் போது
لا إله الا الله الحليم العظيم لا إله الا الله رب العرش الكريم لا إله الا الله رب العرش العظيم لا إله الا الله رب السماوات (ورب الأرض ورب العرش الكريم ( احمد
வணக்கத்திற்கு தகுதியானவன் மகத்துவமும், சகிப்புத்
தன்மையும் மிக்கவனுமான இறைவனைத் தவிர யாருமில்லை. வணக்கத்திற்கு தகுதியானவன்
சங்கையான அர்ஷின் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. வணக்கத்திற்கு தகுதியானவன்
மகத்துவமான அர்ஷுடைய நாயனான அல்லாஹுவைத் தவிர யாருமில்லை. வணக்கத்திற்கு தகுதியானவன்
சங்கையான அர்ஷின் இறைவனும் வானங்கள் பூமிகளின் இறைவனுமான அல்லாஹுவைத் தவிர
வேறுயாரு மில்லை.” என்று ஓதுவார்கள். (முஸ்னது
அஹ்மது)
இவ்வாசகத்தின் முதல் வரி
(لا إله الا الله العلي العظيم ( احمد
மகத்துவம் மிக்கவனும் உயர்வு மிக்கவனுமான அல்லாஹுவைத் தவிர
வணக் கத்திற்கு தகுதியானவன் யாருமில்லை என்றும் (அஹ்மது) மற்ற வாக்கியங்களை
முன்னர் கண்டது போன்றேயும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறிவிப்பில் :
لا إله إلا الله الحليم الكريم . سبحان
الله رب العرش العظيم . سبحان
الله رب السموات السبع ورب العرش (الكريم
(نسائ ابن ماجة
வணக்கத்திற்கு தகுதியானவன் சங்கையாளனும் சகிப்புத் தன்மை
மிக்கவனுமான அல்லாஹுதஆலாவைத் தவிர யாருமில்லை. மகத்துவமிக்க அர்ஷின் இறைவனான
அல்லாஹு மகா தூய்மையானவன்,
சங்கையான அர்ஷின் இறைவனும் ஏழு வானங்களின் இறைவனுமான அல்லாஹு மகா தூய்மையானவன்
(நஸாயீ, இப்னுமாஜா)
என்றும் வந்துள்ளது.
இவ்வாக்கியங்களில் எது மனனம் ஆனாலும் போதுமானதே. ஏனெனில்
எல்லாம் நபித்துவ நாதரின் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் திருவாயில் இருந்து புறப்பட்ட இறை அறிவிப்பான வாக்கியங்கள்
தாம்.
துஆ எண் 12
: ஹள்ரத் ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : மீனுடையவர்
(ஹள்ரத் யூனுஸ் (அலை) மீன் வயிற்றில் இருந்த போது
ஓதிய
(لا إِله إلا أنت، سبحانك إني كنت من الظالمين (الترمذي
‘வணக்கத்திற்குரியவன்
உன்னையன்றி யாருமில்லை. நீ மகா தூய்மையான வன். நிச்சயமாக நான் அநியாயக் காரர்களில்
உள்ளவன்’ என்ற துஆவை ஈமான் கொண்ட ஓர் அடியான் ஏதேனும் துன்பத்தின் போது ஓதினால்
அல்லாஹுதஆலா அவனின் பிரார்த்தனையை அங்கீகரித்துவிடுவான் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள் (திர்மிதி,
நஸாயீ) மற்றொரு அறிவிப்பில் இவ்வாறு கூறியபோது ஒரு தோழர் இது வெறும் யூனுஸ்
(அலை) அவர்களுக்கு மட்டும் உரியதா? அல்லது ஏனைய முஸ்லிம்களுக்குமா? என வினவியபோது
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அல்லாஹுதஆலா நாம் அவரை துன்ப துயரத்தில் இருந்து காப்பாற்றினோம். இவ்வாறே
முஃமின்களை காப்பாற்றுவோம்” (21:88)
என்று கூறியுள்ளதை நீர் கேட்கவில்லையா?”
(ஹாகிம்) என்றர்கள்.
துஆ எண் 13
: ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் எங்களிடம் நான் உங்களுக்கு மூஸா (அலை) கடலை கடக்கும் போது ஓதிய துஆவை
அறிவிக்கட்டுமா என்று கேட்க நாங்கள் கண்டிப்பாக அறிவியுங்கள் என்றோம். உடன் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்
اللهم ، لك
الحمد
وإليك
المشتكى
،
وأنت
المستعان
،
ولا
حول (ولا قوة
إلا
الله
العلي
العظيم (المعجم الصغير (للطبراني
“யாஅல்லாஹ்!
உனக்கே எல்லா புகழும், உன்பாலே
எல்லா முறையீடுகளும், நீயே உதவி
கோரப்படுபவன், நன்மை
செய்ய பலமும், பாவங்களை
விட்டு விலகுதலும், மகத்துவம்
உடையவனும், உயர்வு
உள்ளவனுமான அல்லாஹுதஆலாவைக் கொண்டே தவிர இல்லை.” என்பதாகும்.
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள் : நான் இதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டது முதல் ஒரு போதும்
அதனைவிட்ட தில்லை. (தப்ரானீ முஃஜமுஸ்ஸகீர்)
துஆ என் 14
: ஹள்ரத் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் நவின்றார்கள் : பாங்கு சொல்லப்படும் போது வானத்தின் கதவுகள்
திறக்கப்படுகின்றன. துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படுகின்றன. எனவே மிகவும் கடினமான
துன்பத்தில், துயரத்தில்
பீடிக்கப்பட்ட மனிதன் முஅத்தின் பாங்கு சொல் வதை எதிர்பார்த்து முஅத்தின் அல்லாஹு
அக்பர் எனும் போது தானும் அல்லாஹு அக்பர் என்று கூறவும். முஅத்தின் ஷஹாதத்
கலிமாவைக் கூறும்போது தானும் ஷஹாதத் கலிமா சொல்லவும் முஅத்தின் ஹய்யஅலஸ் ஸலாஹ்
சொல்லும் போது தானும் ஹய்ய அலஸ்ஸலாஹ் எனச் சொல்லவும். முஅத்தின் ஹய்ய அலல் ஃப லாஹ்
என்று சொல்லும் போது தானும் ஹய்ய அலல் ஃபலாஹ் சொல்லவும் பின்னர்
اللهم رب هذه الدعوة
التامة الصادقة الحق المستجاب لها ، دعوة الحق وكلمة التقوى ، أحينا عليها ، وأمتنا
عليها ، وأبعثنا عليها واجعلنا من خيار أهلها محيانا ومماتنا
உண்மையான,
பரிபூரணமான எவற்றின் காரணமாக துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படுகின்றனவோ
அத்தகையதுமான, இறையச்சத்தின்
கலிமாவான சத்தியத்தின் அழைப்புமான இந்த அழைப்பின் இறைவனான அல்லாஹ்வே! எங்களை இந்த
அழைப்பின் மீதே வாழச் செய்து அதன் மீதே மரணிக்கச் செய்வாயாக எங்களை, உயிருடன்
இருக்கும் போதும் மரணித்தவர்களாக இருக்கும் போதும் இந்த அழைப்பை உடையவர்களான
சிறந்தோரில் ஆக்குவாயாக எனக்கூறி பின்னர் தம் அனைத்து விதமான தேவையை கேட்கட்டும்.
(கன்ஜுல் உம்மால்) இதற்கு பிறகு அல்லாஹுதஆலாவின் அருள், அங்கீகாரம்
விரைந்து முன்னோக்கி வரும்.
துஆ எண் 15
: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள் : எனக்கு ஏதேனும் கடுமையான துன்பம் ஏற்பட்டு ஒன்றும் இயலாதவனா
நான் ஆகும் போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து ஓ முஹம்மதே! தாங்கள்
توكلت على الحي الذي لا يموت ، والحمد لله الذي لم يتخذ ولدا ، ولم يكن (له
شريك في الملك
، ولم يكن له ولي من الذل وكبره تكبيرا
( الحاكم
“ஒருபோதும்
மரணிக்காதவனும் நித்திய ஷீவனாக இருப்பவன் மீதே நான் நம் பிக்கை கொண்டேன்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எத்தகையவன் எனில், அவன் யாரையும்
மகனாக்கி கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை.
யாரேனும் அவனுக்கு உதவியாளராக இருக்க வேண்டும் என்ற அளவிற்கு அவன் இயலாதவனும்
அல்ல. அவனை பெரிதும் மகத்துப்படுத்துவீராக” என்று ஓதும்படி கூறுவார்கள். (ஹாகிம்)
இந்த துஆ தொடர்பான ஒரு சுவாரசியமான சம்பவம் வரலாற்றில் இடம்
பெற்றுள்ளது. அதாவது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஒரு நபர் எதிரிகளால்
சிறைபிடிக்கப்பட்டார். அந்நபரின் தந்தை ஈட்டுத்தொகை கொடுத்து விடுவிக்க கேட்ட போது
எதிரிகள் இவரால் முடியாத தொகையை கூறினர். அவர் இது பற்றி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களிடம் முறையிட்ட போது உம்மகனுக்கு இந்த துஆவை (மேற்கூறிய துஆ) அதிகம்
ஓதும்படி கடிதம் எழுதுவாயாக என்று கூற அவரும் கடிதம் எழுதி அனுப்பினார். அவரின்
மகன் அதனை தொடர்ந்து ஓதிவர அல்லாஹ்வின் பேரருளால் எதிரிகள் பாராமுகமாக இருந்த
சமயத்தை வாய்ப்பாக பயன்படுத்தி அங்கிருந்து தப்பியது மட்டுமின்றி எதிரிகளின் 40 ஒட்டகைகளையும்
அழைத்துக் கொண்டு தம் இல்லம் வந்து சேர்ந்தார். (இஸ்பஹானீ)
இதுவரை 15 துஆக்கள்
வாசகர்களுக்கு தரப்பட்டுள்ளன. இவற்றில் சில கடனுக்காக பிரத்தியேகமாக உள்ளவையும்
சில பொதுவாக துன்பம் துயரங்களுக்கு உள்ளவையும் உள்ளன. கடன் பெரும் துன்பம்
என்பதில் என்ன சந்தேகம் உள்ளது?
எனவே இவை அரிய பொக்கிஷங்களாகும். இவை வானங்கள் பூமிகளின் பொக்கிஷங்களின்
உரிமையாளனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்மையாளரான நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் திருவாய் வழியாக உம்மத் அனைவருக்கும் பொதுச் சொத்தாக ஆக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த சொத்தை விட்டும் பாராமுகமாக இருப்பது பெரும் துர்பாக்கியமே. வல்ல
அல்லாஹு தஆலா இந்த பொக்கிஷங்களை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ளும் தவ்ஃபீக்கை
அளிப்பானாக. ஆமீன்.
No comments:
Post a Comment