Friday 26 July 2019

குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள்

துல்ஹஜ் முதல் பத்து:
துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களைவிட அல்லாஹுதஆலாவுக்கு மிக உவப்பானதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
                    (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரீ)

இறைவனுக்காக வணக்கம் புரிய துல்ஹஜ்ஜின் பத்து நாட்களைவிட சிறந்த காலம் ஏதுமில்லை. அந்நாட்களில் ஒரு நாள் நோன்பு வைப்பது வருடம் முழுவதும் நோன்பு வைத்ததற்கு நிகராகும். மேலும் அந்நாட்களில் இரவுகளில் ஓரிரவு வணக்கம் புரிவது லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்கிய தற்கு நிகராகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளி யுள்ளார்கள்.
(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ, இப்னு மாஜா)
துல்ஹஜ் ஒன்பதாம் நாள்
அரஃபாவின் நோன்பு (துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளின் நோன்பு) நான் அல்லாஹ்வின் மீது “அவன் அந்நாளின் முந் தைய ஆண்டு, பிந்தைய ஆண்டு (இரு ஆண்டின்) பாவங் களுக்கு பரிகாரமாக ஆக்குவான்” என்று ஆதரவு வைக்கி றேன்” என நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் பகன்றுள் ளார்கள்.     (அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி), நூல் : முஸ்லிம்)
துல்ஹஜ் பத்தாம் நாள் இரவு
இரு பெருநாட்களின் இரவுகளில் யார் நன்மையை நாடியவராக வணக்கம் புரிகிறாரோ அவரது இதயம் மனிதர் களின் இதயங்கள் மரணிக்கும் போது மரணிக்காது.” என நபி (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.
(அறிவிப்பாளர் : அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி), நூல்:இப்னு மாஜா)
துல்ஹஜ் பத்தாம் நாள் (பெருநாள்) பகல் 
அல்லாஹுதஆலா தனது திருமறையில்
எனவே, உமது இறைவனை தொழுது வருவீராக!
(குர்பானி) அறுத்துப் பலியிடுவீராக! (அல்குர் ஆன் 108:2)
என்று இயம்புகின்றான்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “வசதியிருந்தும் குர்பானி கொடுக்காதவர் நமது தொழும் இடத்திற்கு வரவேண்டாம்”. என்று கூறினார்கள். 
                        (நூல் : முஸ்னது அஹ்மது, இப்னு மாஜா)
குர்பானி பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் நன்மை கிடைக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல் : முஸ்னது அஹ்மது, இப்னு மாஜா)
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கொழுத்த கொம்புள்ள செம் மறி கிடாக்களை குர்பானி கொடுத்தார்கள். தங்களது திருக்கரத்தாலேயே அவற்றை அறுத்தார்கள். பிஸ்மில்லாஹ் சொன் னார்கள். தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறினார்கள். அவர்கள் தமது பாதத்தை பிராணியின் கழுத்தின் மீது வைத்திருந்தார் கள்.                                  (நூல் : முஸ்லிம்)
வருடத்தில் ஏனைய நாட்களில் நிறைவேற்ற முடியாத இரண்டு விசேஷமான அமல்கள் இந்த நாட்களிலேயே நிறை வேற்றப்படுகின்றன. 1. தக்பீருத் தஷ்ரீக் 2. குர்பானி.
கேள்வி : தக்பீருத் தஷ்ரீக் என்றால் என்ன?
பதில் : துல்ஹஜ் பிறை 9 ஃபஜ்ர் முதல், பிறை 13 அஸ்ர் வரையிலான 23 நேர ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்குப்பின் ஆண்கள் மிதமான சப்தத்துடனும் பெண்கள் சப்தமின்றியும்
                அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்,
லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து
என்று சொல்வது கடமையாகும். (இவையல்லாத வழமை யிலுள்ள அதிகப்படியான தக்பீர்களும் விரும்பத்தக்கதாகும்.)
(ஷாஃபிஈ மத்ஹபின்படி மூன்று முறை அல்லாஹு அக்பர் கூற வேண்டும்)
கேள்வி : தக்பீருத் தஷ்ரீக்கின் பின்னணி என்ன?
பதில்: இப்றாஹீம் (அலை) தனது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி அறுக்க நாடியபோது சுவர்க்கத்திலிருந்து பகரத்தை (ஆட்டை) ஜிப்ரயீல் (அலை) கொண்டு வந்தார்கள். இப்றாஹீம் (அலை) தனது மகன் இஸ்மாயீல் (அலை)யை அறுத்து விடுவார்களோ என்று பயந்தபோது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நாவிலிருந்து “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” என்ற வார்த்தை வெளியானது. ஷிப்ரயீல் (அலை)யை பார்த்த உடன் இப்றாஹீம் (அலை) ‘லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்’ என்றார்கள். தனக்கு பகரம் (ஆடு) கிடைத்துவிட்டது என்று தெரியவந்த உடன் இஸ்மாயில் (அலை) ‘அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து’ என்றார்கள்.
(ரத்துல் முஹ்தார் பாகம் 2, பக்கம் 178, தஹ்தாவீ)
கேள்வி : தக்பீருத் தஷ்ரீக் விடுபட்டால் களா செய்ய வேண்டுமா?
பதில்: தக்பீருத் தஷ்ரீக் விடுபட்டால் ‘களா கிடையாது’ தவ்பா செய்வதினால் விட்ட பாவம் மன்னிக்கப்படும்.
(ஃபதாவா தாருல் உலூம், பாகம் 5, பக்கம் 207)
(ஷாஃபிஈ மத்ஹப் படி மறந்தவர் நினைவு வந்தவுடனும் வேண்டுமென்றே விட்டவரும் பின்னர் சொல்லிக் கொள்வதும் விரும்பத்தக்கதாகும்.)
கேள்வி : பெருநாள் அன்று செய்ய வேண்டிய சுன்னத்தான அமல்கள்?
பதில் : 1. மிஸ்வாக் செய்வது, 2. குளிப்பது, 3. மார்க்க வரம்புக்குட்பட்டு தம்மை அலங்கரிப்பது, 4. புதிய அல்லது துவைத்த நல்ல ஆடைகள் உடுத்துவது, 5. நறுமணம் பூசுவது, 6. அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுவது, 7. பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்கு  அதிகாலையிலேயே செல் வது, 8. தொழுகைக்கு முன் ஸதகா செய்வது, 9. ஒரு வழியில் சென்று வேறு வழியாக திரும்புவது, 10. முடிந்தவரை நடந்து செல்வது, 11. செல்லும் வழியில் சப்தமிட்டு தக்பீர் முழங்கிக் கொண்டே செல்வது. இதில் வெட்கமோ கூச்சமோ கொள்ளக் கூடாது. இஸ்லாமிய எழுச் சியை பறைசாற்றுவதே இத்தக்பீர் முழக்கத்தின் நோக்கம், 12. வசதியிருப்பின் ஈத்காவில் தொழு கையை நிறைவேற்றுவது, 13. குர்பானி கொடுக்கும் நபர், துல்ஹஜ் பிறை பார்த்ததிலிருந்து குர்பானி கொடுக்கும்வரை நகம், முடியை அகற்றாமல் இருப்பது.
கேள்வி : பெருநாள் தொழுகைக்கு முன் ஏதா வது சாப்பிட வேண்டுமா? இரண்டு பெருநாளுக் கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
பதில் : நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு முன் பேரீத் தம் பழம் அல்லது இனிப்பு போன்றவற்றை சாப்பிடுவதும், ஹஜ்ஜிப் பெருநாள் அன்று தொழும் வரை எதுவும் சாப்பிடா மல் தொழுத பின் தனது குர்பானியின் இறைச்சியை சாப்பி டுவதும் விரும்பத்தக்கதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்புப் பெருநாள் அன்று சில பேரீத்தம் பழங்களை சாப்பிட்டு செல்வார்கள். ஹஜ்ஜிப் பெருநாளில் தொழும்வரை எதுவும் சாப்பிட மாட்டார்கள்.
(நூல் : திர்மிதி, இப்னுமாஜா அறிவிப்பாளர் - புரைதா (ரலி))
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு பெருநாள் அன்று சில பேரீத்தம் பழங்களை சாப்பிட்டபின்தான் ஈத்காவிற்கு செல்வார்கள். பேரீத்தம் பழத்தை ஒற்றைப் படையில் சாப்பிடுவார்கள்.
(நூல்: புகாரி அறிவிப்பாளர் - அனஸ் ரலி)
பெருநாளுக்கும் நோன்பு நாட்களுக்கும் வித்தியாசம் காட்டுவதற்காக சாப்பிடுவார்கள் (குறிப்பாக பேரீத்தம் பழம் வெறும் வயிற்றில் சாப்பிடுவதினால் பார்வைக்கு பலம்) பேரீத் தம் பழம் இல்லை என்றால் ஏதாவது இனிப்பு சாப்பிடலாம். ஹஜ்ஜிப் பெருநாளில் முதலில் குர்பானி ஆட்டின் இறைச் சியை சாப்பிடுவது விரும்பத்தக்கதாகும்.
(ஃபதாவா ஆலம்கீரி, பாகம் 1, பக்கம் 72)
கேள்வி : ஹஜ்ஜிப் பெருநாளில் செய்ய வேண்டிய சிறந்த அமல் எது?
பதில் : குர்பானி கொடுப்பதாகும். குர்பானியின் தினத்தன்று ஆதமின் மகனின் செயலில் குர்பானி கொடுப்பதைவிட அல்லாஹ்விடம் மிகப்பிரியமான செயல் வேறேதுமில்லை. திண்ணமாக, அது (குர்பானி) மறுமை நாளில் தனது கொம்பு கள், உரோமங்கள், குளம்புகளுடன் வரும். நிச்சயமாக (குர்பானி யின்) இரத்தம், பூமியில் விழுவதற்கு முன் அல்லாஹ்விடத்தில் சென்றடைந்துவிடுகிறது. ஆகவே மன நிறைவோடு, அகமகிழ் வோடு அதை நிறைவேற்றுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.                       (நூல் : திர்மிதி, இப்னுமாஜா)
கேள்வி: குர்பானி யார் மீது கடமை?
பதில் : பருவமடைந்த, அறிவுத் தெளிவான, வசதி பெற்ற முகீமான (சொந்த ஊரில் இருப்பவர், அல்லது வேறு ஊரில் 15 நாட்களுக்கு மேல் தங்கியிருப்பவர், 78 கி.மீயை விடகுறைவான தூரத்திற்குள் பயணம் செய் பவர் ஆகியோர் ஷரீஅத்தின் பார்வையில் “முகீம்” என்று கருதப்படுவார்.
78 கி.மீ அல்லது அதற்கு மேல் பயணம் மேற்கொள்பவர் முஸாஃபிர் - ஷரீஅத்தின் பார்வையில் பயணியாக கருதப்படுவார்) ஒ வ்வொரு முஸ்லிமும் கொடுப்பது வாஜிப் - கட்டா யமாகும். (ஷாஃபிஈ மத்ஹபில், ‘சுன்னத் முஅக்கதா வலியுறுத் தப்பட்ட சுன்னத்தாகும்.)
கேள்வி: வசதி பெறுதலின் அளவுகோல் என்ன?
பதில்: ஜகாத் கொடுக்குமளவு வசதி பெற்றிருக்க வேண்டும். (ஷாஃபிஈ மத்ஹப் முறைப்படி: துல்ஹஜ் 10 முதல் 13 வரை உள்ள நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய செலவுகள் போக குர்பானி பிராணி வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர் மீது குர்பானி கொடுப்பது “சுன்னத் முஅக்கதா”வாகும்.
கேள்வி : ஜகாத்தைப் போன்றே அப்பொருளின் மீது ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டுமா?
பதில் : இல்லை. ஜகாத்திற்கும், குர்பானிக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன.
ஜகாத் கடமையாவதற்கு...
1. தங்கம், வெள்ளி, வியாபாரப் பொருட்கள், பணம் போன்ற வற்றில் மட்டுமே நிஸாபை கணக்கிடப்படும்.
 (தங்கத்தின் நிஸாப் 87.480 கிராம், வெள்ளியின் நிஸாப் 612.360 கிராம், பணத்தில் வெள்ளியை அடிப்படையாக வைக்கப்படும்) 2. நிஸாபை அடைந்து அதன் மீது ஒரு வருடம் பூர்த்தி யாகி இருக்க வேண்டும்.
குர்பானி கடமையாவதற்கு...
1. இந்த (தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள்) நான்கு பொருட்கள் மூலம் நிஸாபை அடைந்தாலும் கடமை யாகும். அஃதன்றி அத்தியாவசியத்தேவை போக மீதமுள்ள (நான்கல்லாத) பொருட்களின் மதிப்பு மூலம் நிஸாபை அடைந்தாலும் குர்பானி கடமையாகும். தேவைகளைவிட அதி கமாக உள்ள வீட்டுச்சாமான்கள், குடியிருக்கும் வீடு போக மற்ற சொந்த வீடுகளையும் சேர்க்கப்படும். ஜக்காத்தில் இவை களை கணக்கிடப்படமாட்டா.
2. வருடம் பூர்த்தியாக வேண்டும் என்ற அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால், குர்பானியின் நாள்களான 10 முதல் 12 வரை உள்ள மூன்று நாட்களில், மூன்றாவது நாளின் மாலைக்குள் ஒருவருக்கு இந்நிஸாபுடைய அளவுக்குப் பொருள் ஏதாவது ஒரு வழியில் கிடைத்துவிட்டாலும் அவர் மீது அன்றைய தினம் குர்பானி கொடுப்பது வாஜிபாகும்.
கேள்வி : நிஸாபுடைய அளவு மஹர் வர வேண்டிய பெண்மீது குர்பானி கடமையா?
பதில் : கணவர் தரவேண்டிய மஹர் நிஸாபின் அளவை விட அதிகமாகவே உள்ளது. ஆனால் கணவர் இன்னும் மனைவி யிடம் கொடுக்கவில்லை என்றால், மஹர் கையில் கிடைக்கும் வரை இந்த பெண்மீது குர்பானி வாஜிபாகாது.
(ஃபதாவா ஹிந்திய்யா, பாகம் 5, பக்கம் 293)
கேள்வி : சரிசமமான முதலீடு செய்து கூட்டு வியாபாரம் செய்யும் போது யார் மீது குர்பானி வாஜிபாகும்?
பதில் : ஜகாத் கொடுக்குமளவு வசதியுள்ள ஒவ்வொரு வரும் தனித்தனியாக குர்பானி கொடுப்பது கடமையாகும்.
கேள்வி:ஒரு நபர் மீது எத்தனை குர்பானி அவசியம்? மனைவி மக்கள் மீது குர்பானி கடமையா?
பதில் : ஒருவர் எவ்வளவு பணமுள்ளவராக இருப்பினும் ஒரு நபருக்கு ஒரு குர்பானி தான் கடமையாகும். மனைவி மக்களுக்கு ஜகாத்தின் நிஸாபுடைய அளவு தனிப்பட்ட பொருள்கள் இருப்பின் அவர்கள் மீதும் வாஜிபாகும். இல்லை யெனில் கணவர் மீதோ, பெற்றோர் மீதோ வாஜிபாகாது.
கேள்வி : கடன் வாங்கி குர்பானி கொடுப்பது பற்றி?
பதில் : கடமையில்லாதவர் கடன் வாங்கி குர்பானி கொடுத் தால் குர்பானி கூடிவிடும். நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேக மில்லை. கூடுமான வரை கடனை விட்டுத்தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தமது கடனை நிறைவேற்ற கவலை கொள்வதும், அதற்காக முயற்சிப் பதும் கடன்பட்ட வரின் தலையாய கடமையாகும்.
கேள்வி : நோய் குணமாக குர்பானி கொடுக்க லாமா?
பதில் : நோய் குணமாக முழு ஆட்டையோ அல்லது மாட்டையோ நேர்ச்சை செய்து அப்படியே தானதர்மம் செய் வது சிறந்ததாகும். சிலர் நோயாளியின் உயிருக்கு பகரமாக குர்பானியின் உயிர் என்கிறார்கள். இது தவறான சிந்தனை யாகும். அல்லாஹ் தன் அருட்கொடையினால் நோயை குணப் படுத்துவான் என்ற சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். 
                                     (கிஃபாயதுல் முஃப்தி, பாகம் 8, பக்கம் 255)
கேள்வி : பல வருடங்களாக குர்பானி கொடுக்காத ஒருவர் இப்போது குர்பானி கொடுக்க நாடினால் என்ன செய்வது?
பதில் : ஒவ்வொரு வருடத்தினுடைய குர்பானிக்கு பகரமாக ஒரு ஆட்டின் கிரயத்தை தானதர்மம் செய்ய வேண்டும்.
                                     (அஜீஸுல் ஃபதாவா, பாகம் 1, பக்கம் 724)
கேள்வி : ஒருவர் ஹஜ் செய்கிறார். ஹஜ்ஜில் குர்பானி கொடுக்கிறார். தனது ஊரில் குர்பானி கொடுப்பது அவரது வழமையாகும். இந்நிலை யில் அந்த ஹாஜியானவர் ஹஜ்ஜில் கொடுக் கும் குர்பானி மட்டும் போதுமா? வழமை போல் அவருக்காக ஊரிலும் குர்பானி கொடுக்க வேண்டுமா?
பதில் : இங்கு சில விளக்கங்கள் உள்ளன. முகீமின் மீதே குர்பானி கடமை. ஆகவே, துல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய நாட்களில் ஒரு ஹாஜி (மக்காவில் 15 நாட்கள் தங்குவதாக நிய்யத் செய்து, கஸ்ராகத் தொழாமல்) முகீமாக இருந்தால் அவர் ஹஜ் சம்பந்த மான குர்பானி தவிர மேற்கூறப்பட்ட பொதுவான (மாலி) குர்பானியும் கொடுக்கவேண்டும். இந்நிலை யில் இல்லாத ஹாஜிகளுக்கு இந்த குர்பானி கட்டாயமல்ல.
ஹஜ் சம்பந்தப்படாத பொதுவான (மாலி) குர்பானி ஒருவர் மீது கடமையாக வேண்டுமெனில் அவர் நிஸாபை சொந்தமாக் கியவராக இருப்பதுடன் முகீமானவராகவும் இருக்க வேண்டும்.
                                                                     (நூல் : ஹிதாயா 4:427)
கேள்வி : ஹாஜிகள் முகீமாக முடியுமா?
பதில் : எல்லா ஹாஜிகளும் பிறை எட்டு அன்று மக்காவை விட்டு மினாவிற்கு சென்றே ஆக வேண்டும். முன்பு ‘மினா’ மக்காவில் கட்டுப்படாத தனி கிராமமாக இருந்ததால் எந்த ஹாஜியும் பிறை 8,9,10,11,12 ஆகிய நாட்களில் முகீமாக இருக்க முடியாது என்ற நிலை இருந்தது.
ஆனால், இப்போது மக்காவின் குடியிருப்புகள் மினா வரை விரிவாகிவிட்டதால் ‘மினா’ மக்காவிலேயே கட்டுப்பட்ட ஒரு மஹல்லா போன்று ஆகிவிட்டது. ஆதலால் மேற்கூறப்பட்ட நாட்களில் ஹாஜிகள் ‘மினா’விற்கு வந்தாலும் அவர் மக்கா என்ற ஊரிலேயே தங்கியிருப்பவர் போலாவார். ஆகவே, தற்போது உள்ஹிய்யாவின் தினங்களில் ஹாஜிகள் முகீமாக ஆக முடியும்.
உதாரணமாக ஒரு ஹாஜி பிறை ஒன்பது அன்றோ அல்லது அதற்கு முன்பிருந்தோ 15நாட்கள் மக்காவில் தங்கு வதாக நிய்யத் செய்து தங்கியிருக்கிறார்.இந்த 15 நாட்களில் உள்ஹிய்யாவின் 10,11,12 ஆகிய நாட்கள் வருகிறது என்றால் இப்படிப்பட்ட ஹாஜிகள், ஹஜ் சம்பந்தமான குர்பானி போக மாலி குர்பானியும் கொடுப்பது கட்டாயமாகும். நாடினால் இதை மக்காவிலும் கொடுக்கலாம். அல்லது குர்பானி நாட்களில் அவருக்காக சொந்த நாட்டிலும் யாராவது கொடுக்கலாம். கொடுப்பது கட்டாயம்.
இந்நிலையில் இல்லாத ஹாஜிகள் மீது இது கடமையல்ல. (யாரேனும் இந்த குர்பானி கொடுக்கவில்லையெனில் அதனின் கிரயத்தை தர்மம் செய்து விட வேண்டும்)
இந்தியா மற்றும் அண்டை நாட்டின் புகழ் பெற்ற முஃப்திகள் ஹிஜ்ரி 1420 (2000) துல்ஹஜ் பிறை 3இல் ஹஜ்ஜின் போது புனித மக்காவிலுள்ள ஸவ்லதிய்யா மதரஸாவில் ஒன்றுகூடி இந்த முக்கியமான பிரச்சினையை ஆய்வு செய்து மேற்படி ஃபத்வாவை (தீர்ப்பை) வழங்கியுள்ளனர்.
(பார்க்க : நிதாயே ஷாஹி ஹஜ் சிறப்பிதழ் (ஜனவரி 2001, பக் 172,173))
குறிப்பு : இந்த பத்வா ஹனபி மத்ஹபின் படியே தரப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹபின் படி இந்த பிரச்சனையே வராது. ஏனெனில் ஷாஃபிஈ மத்ஹபின்படி குர்பானி கொடுப்பது ‘சுன்னத்தே முஅக்கதா’ (வலியுறுத்தப்பட்ட சுன்னத்) ஆகும். மேலே கூறப்பட்ட ‘நிஸாப்’ஐ சொந்தமாக்கியிருக்க வேண்டிய நிபந்தனையோ, முகீமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோ இல்லை. எனவே, அவர் ஹாஜியாக இருந்தாலும் பொதுவான குர்பானியை கொடுப்பது சுன்னத் முஅக்கதாவாகும்.
கேள்வி : குர்பானி கொடுக்கும் நாள்கள் எத்தனை?
பதில் : துல்ஹஜ் பிறை 10முதல் 12மாலை மஃக்ரிப் வரை மூன்று நாட்கள் (ஷாஃபிஈ மத்ஹப்படி 13 மஃக்ரிப் வரை நான்கு நாட்கள் ஆகும்.)
கேள்வி : குர்பானி கொடுக்க ஆரம்ப நேரம் எது?
பதில் : ஈத் தொழுகை நடத்த ஷரீஅத்தில் அனுமதியில் லாத அளவு குக்கிராமமாக இருந்தால், துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் சுப்ஹு ஏற்பட்டதிலிருந்து குர்பானியின் நேரம் ஆரம்ப மாகும். நகரவாசிகள் பெருநாள் தொழுகைக்கு முன்னர் குர் பானி கொடுப்பது கூடாது. தொழுகைக்குப் பின்னரே கொடுக்க வேண்டும். அவ்வூரில் ஏதாவது ஒர் இடத்தில் தொழுகை நடை பெற்றிருந்தாலும் போதும்.
கேள்வி : நகரவாசிகள் தொழுகைக்கு முன்னரே குர்பானியை அறுத்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
பதில் : அது குர்பானியாக(உள்ஹிய்யாவாக) நிறைவேறாது. மீண்டும் ஒரு பிராணியை தொழுகைக்குப் பின்னர் அறுத்து குர்பானி கொடுக்க வேண்டும்.
(ஷாஃபிஈ மத்ஹப் படி மேற்கூறிய நேரம் வந்தபின் தொழு கைக்கு முன்னர் அறுத்தாலும் கூடும். நேரம் வரும் முன் அறுத்து விட்டால் கூடாது.)
கேள்வி : அரபு நாட்டில் உள்ள நபருக்காக இந்தி யாவில் வசிப்பவர் குர்பானி கொடுக்க நாடினால் இந்தியக்கணக்குப்படி துல்ஹஜ் பிறை 10ம் நாள் அதிகாலை ‘ஃபஜ்ரு ஸாதிக்’க்கு முன்பு குர்பானி கொடுத்தால் கூடுமா?
பதில்: குர்பானி கொடுக்கும் போது அறுக்கப்படும் இடத் தின் நேரப்படியே கொடுக்கப்பட வேண்டும். மேலே கூறப்பட்டது போல் நகர, கிராமவாசிகளுக்குள்ள நேரம் வந்த பின்புதான் கொடுக்கப்படவேண்டும்.
காரணம் நேரம் குறிப்பிடப்பட்ட வணக்கங்களில் நிறை வேற்றப்படும் இடங்களின் நேரத்தையே கவனத்தில் கொள்ளப் படும். உதாரணமாக தொழுகை நோன்பு போன்ற வணக்கங்கள் நிறைவேற்றப்படும் இடங்களின் நேரப்படியே நிறைவேற்றப்படு கிறது. இது போன்று தான் குர்பானியும்.
இந்தியாவில் இருக்கும் ஒருவருக்குப் பகரமாக பதலீ ஹஜ் செய்யும்போது மக்காவில் அரஃபா நாளன்று இந்தியாவில் இருப்பவர்களுக்குத் தானே நாம் பதலீ ஹஜ் செய்கிறோம், இந்தியக்கணக்குப்படி (இன்று) பிறை எட்டுத்தானே நாம் மட்டும் நாளை அரஃபாவில் தங்கிக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டு அவர் அன்று அரஃபாவில் தங்கவில்லை என்றால் அவரது ஹஜ்ஜே கூடாது.
காரணம், இந்தியாவில் இருப்பவருக்காகச் செய்தாலும் ஹஜ் மக்காவில் நிறைவேற்றப்படுவதால் மக்காவின் நேரத்தை யே கவனிக்கப்பட வேண்டும். இது போன்றே குர்பானியும்.
கேள்வி : குர்பானியுடைய நாள்களில் குர்பானி கொடுப்பதற்குப் பதிலாக அதற்குரிய பணத்தில் வேறுவகையான தானதர்மங்கள் செய்தால் அது குர்பானியின் கடமைக்கு ஈடாகுமா?
பதில் : ஈடாகாது. இது அறவே கூடாது. அப்படி செய்தால் அவர் குர்பானி கொடுக்காத குற்றத்திற்கு ஆளாவார்.
கேள்வி: குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணிகள் எவை?
பதில்: ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று மட்டும்தான். இவற்றில் அனைத்து வகையும் (செம்மறி, வெள்ளாடு, எருது, எருமை) கூடும்.
இவையல்லாத கோழி, வாத்து, மான், முயல் போன்ற பிராணிகளை சாப்பிடுவது ஹலாலாக இருந்தாலும் குர்பானியாக கொடுப்பது கூடாது.
கேள்வி : குர்பானிப் பிராணிகளின் வயது வரம்பு என்ன?
பதில்: 1. செம்மறியாடு, தும்பையாடு:- ஒரு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அல்லது ஆறு மாதமாகி நன்கு கொழுத்து ஒரு வயது உடையது போல் இருந்தால் அதனை குர்பானி கொடுப்பதும் கூடும்.
2. வெள்ளாடு : ஒரு வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்.
3. மாடு : இரண்டு வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்.
4. ஒட்டகம் : ஐந்து வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்.
(ஷாஃபிஈ மத்ஹபுப்படி வெள்ளாடு இரண்டு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். செம்மறி, தும்பையாடு ஒரு வயதைவிடக் குறைவாக இருந்து பல் விழுந்திருந்தால் கூடும்.)
கேள்வி : குர்பானிப் பிராணிகள் குறையற்று இருக்க வேண்டுமா?
பதில்: ஆம், குர்பானிப் பிராணிகள் குறையற்று இருப்பது அவசியமாகும். பின்வரும் குறைகள் காணப்பட்டால் குர்பானி கூடாது.
1.            மூக்கு அறுபட்டது.
2.            புற்பூண்டுகளை சாப்பிட முடியாத அளவு நாக்கு அறுபட்டு இருப்பது.
3.            ஆடு (எந்த வகையாக இருப்பினும்) அதன் மடியின் ஏதேனும் ஒரு காம்பில் பால் வராமல் இருத்தல்.
4.            மாடு, ஒட்டகம் (எவ்வகையாக இருப்பினும்) அதன் மடியின் இரு காம்புகளில் பால் வராமல் இருத்தல்.
5.            பிராணியின் மடி துண்டிக்கப்பட்டதாக இருத்தல். அல்லது மடியில் காயம், புண் உண்டாகி அதன் மூலம் கன்று, குட்டி, பால் குடிக்க இயலாத அளவில் இருத்தல்.
6.            கண்கூடாகத் தெரியக்கூடிய அளவில் பிராணிக்கு நோய் இருத்தல்.
7.            ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத பிராணியாக இருத்தல்
8.            பிராணி குருடாக இருத்தல், ஒற்றைக் கண் உள்ளதாக இருத்தல், ஒரு கண்ணின் பார்வையில் மூன்றில் ஒரு பாகம் அல்லது அதிகமாக பார்வை குறைவு ஏற்பட்டி ருத்தல்.
9.            பிராணிக்கு இயற்கையிலேயே காது (இரண்டுமோ அல்லது இரண்டில் ஒன்றோ) இல்லாமல் இருத்தல். அது போல் மூன்றில் ஒரு பாகம் அல்லது அதைவிட அதிகமாக காது துண்டிக்கப் பட்டு இருத்தல். சிறிய காதாக இருப்பது குர்பானி கொடுப்பதற்கு  இடையூறல்ல.
10.          மூன்றில் ஒரு பங்கு அல்லது அதைவிட அதிகமாக வால் துண்டிக்கப்பட்டிருத்தல்.
11.          கால் ஊனமான பிராணி. அதாவது மூன்று கால்களால் மட்டுமே நடக்கிறது. நான்காவது காலை பூமியின் மீது வைக்க முடியவில்லை. அல்லது வைக்கிறது. ஆனால் அதன் மூலம் நடக்க முடியாது என்றிருந்தால் குர்பானி கூடாது.
                ஆனால் நடக்கும்போது அந்த ஊனமுற்ற காலையும் பூமி யில் ஊன்றி அதன் மூலமும் நடக்கிறது என்றாலோ, அல்லது செல்வதற்காக அதன் மீது ஊன்றிக் கொண்டு நொண்டிச் செல்கிறது என்றாலோ அப்பிராணியை குர்பானி கொடுப்பது கூடும்.
12.          எலும்புகளிலுள்ள மூளை இல்லாமல் போய்விடுமளவு, அல்லது அறுக்கும் இடம்வரை தானே நடக்க இயலாத அளவு மெலிந்து இருத்தல்.
                இவ்வாறின்றி சாதரணமாக மெலிந்திருந்தால் குர்பானி கொடுக்கலாம். எனினும், நன்கு கொழுத்த பிராணியை குர்பானி கொடுப்பது மிகவும் ஏற்றமாகும்.
13.          பிராணிக்கு அனைத்து பற்களும் இல்லாமல் இருத்தல். அல்லது தீனியை மெல்ல முடியாத அளவு அதிகமான பற்கள் இல்லாமல் இருத்தல்.
14.          பிராணிக்கு இயற்கையிலேயே கொம்பு இல்லாவிட்டாலும், அல்லது கொம்பு இருந்து ஒடிந்துவிட்டாலும், அல்லது கொம்பின் உறை கழன்றுவிட்டாலும் பரவாயில்லை. அதைக் குர்பானி கொடுக்கலாம். ஒடிந்ததன் தாக்கம் மூளையைப் பாதித்திருந்தால் குர்பானி கொடுப்பது கூடாது.
15.          மாறுகண், பைத்தியம், சொறி ஆகிய குறைபாடுள்ள பிராணியை குர்பானி கொடுத்தால் கூடும். எனினும், பைத்தியத்தின் காரணமாக சாப்பிட, குடிக்க இயலாத அளவுக்கு ஆகிவிட்டால், அதைப் போன்று சொறியின் காரணமாக மிகவும் மெலிந்து (பலவீனமானதாகி) விட்டால் அப்பிராணியை குர்பானி கொடுப்பது கூடாது.
கேள்வி : மலட்டுப் பிராணியை குர்பானி கொடுக்கலாமா?
பதில்: கொடுக்கலாம்.
கேள்வி : எந்தப் பிராணிகளை குர்பானி கொடுப்பது சிறப்பு?
பதில்: 1. காயடிக்கப்பட்ட பிராணி, ஏனெனில், இதில் இறைச்சி அதிகமாக, சுவையாக இருக்கும்.
2.            விலை உயர்ந்த பிராணி.
 கேள்வி : மேற்கண்ட ஏதேனும் குறைகள், அறுக் கும் போது ஏற்பட்டால் என்ன செய்வது?
பதில்: அறுக்கும்போது துள்ளுவதாலோ, குதிப்பதாலோ மேற்கண்ட ஏதேனும் குறை ஏற்பட்டால் பரவாயில்லை. அப்பிராணியை குர்பானி கொடுக்கலாம்.
கேள்வி : பிராணி சூல் (கர்ப்பம்) கொண்டிருந் தால், அது குறையாகுமா?
பதில்: அது குறையன்று. அதைக் குர்பானி கொடுக்கலாம். எனினும் பேறு காலத்திற்கு நெருக்கமாக உள்ள பிராணியை அறுப்பது மக்ரூஹ் ஆகும்.
 (ஷாஃபிஈ மத்ஹபில் சூல் கொண்ட பிராணியை குர்பானி கொடுப்பது கூடாது.)
கேள்வி : மலம் சாப்பிடும் ஆடு, மாடு, ஒட்டகை களை குர்பானி கொடுக்கலாமா?
பதில் : குர்பானி கொடுக்க நாடும் பிராணி மலம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் குர்பானி கொடுப்பதற்கு பல நாட்கள் முன்பே மலம் சாப்பிட வழியில்லாதவாறு அப்பிராணியை கட்டிப்போட வேண்டும். இவ்வாறு பல நாட்கள் கட்டிப் போட்டு மலம் சாப்பிடுவதை விட்டுவிட்டால் குர்பானி கூடும். ஒட்டகமாக இருந்தால் 40 நாட்களும், காளை, எருமையாக இருந்தால் 20 நாட்களும், ஆடாக இருந்தால் 10 நாட்களும் கட்டிப் போட்டு தீனிபோட வேண்டும். அதன் பின் அறுக்க வேண்டும். இவ்வாறு கட்டிப் போடாமல் அறுத்தால் குர்பானி கூடாது.       (ஷாமி, பாகம் 5, பக்கம் 207)
கேள்வி : குர்பானிக்காக வாங்கிய பிராணியை விற்கலாமா?
பதில் : விற்காமல் இருப்பதே நல்லது. விற்ற பிறகு குறை வான விலையில் வேறு குர்பானி வாங்கிவிட்டாலும் மீதமுள்ள பணத்தை தானதர்மம் செய்திட வேண்டும்.
(கிஃபாயதுல் முஃப்தி, பாகம் 8, பக்கம் 197)
கேள்வி : கோயில் மாடுகளை வாங்கி குர்பானி கொடுக்கலாமா?
பதில் : இதில் இரண்டு முறைகள் உள்ளன.
1.            மாட்டின் உரிமையாளர் பலியிடும் நோக்கமின்றி மாட்டை கோயிலுக்காக கொடுத்துவிடுவார். அதை யாரும் விலைக்கு வாங்கி அறுக்க மாட்டார்கள். அந்த மாட்டை உரிமையாளரிடம் வாங்கி குர்பானி கொடுப்பது கூடும்.
2.            மாட்டின் உரிமையாளர்கள் கோயிலின் விசேஷ நாட்களில் பலியிடுவதற்காகவே விட்டுவிடுவார்கள். இந்த மாட்டை உரிமையாளரிடமோ அல்லது கோயிலின் நிர்வாகிகளி டமோ வாங்கி அறுத்தாலும் குர்பானி கூடாது.
ஏனெனில் இது ‘அல்லாஹ் அல்லாதவைகளுக்காக’ நேர்ச்சை செய்யப்பட்டவை என்ற சட்டத்தில் சேர்ந்துவிடும்.
                                (கிஃபாயதுல் முஃப்தி, பாகம் 8, பக்கம் 232)
கூட்டுக் குர்பானி
கேள்வி : குர்பானியை எந்தெந்த முறையில் நிறைவேற்றலாம்?
பதில் : குர்பானியை 1. தனித்தனியாகவும், 2. கூட்டாகவும் (இரு முறைகளில்) நிறைவேற்றலாம்.
கேள்வி : கூட்டுக் குர்பானியில் எத்தனை பேர் கூட்டு சேரலாம்? எந்தெந்த பிராணியில் கூட்டு சேரலாம்?
பதில் : மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏழு பேர் கூட்டு சேரலாம். கூட்டு சேர்பவர்கள் அனைவரும் ஏழில் ஒரு பங்கின் விலையை விட குறையாமல் பணம் செலுத்த வேண்டும்.
ஆட்டில் கூட்டு சேர முடியாது. ஒருவர் மட்டுமே ஓர் ஆட்டைக் குர்பானி கொடுக்க இயலும்.
கேள்வி : இவ்விரு முறைகளில் எது சிறந்தது?
பதில் : ஒட்டகம் அல்லது மாட்டில் கூட்டு சேர்ந்து ஏழில் ஒரு பங்கு கொடுப்பதைவிட தனியாக ஓர் ஆடு கொடுப்பது சிறந்ததாகும். யாரையும் கூட்டாக்காமல் முழு ஒட்டகம் அல் லது முழு மாடு கொடுப்பது, ஓர் ஆட்டைக் கொடுப்பதைவிடச் சிறந்ததாகும்.
கேள்வி : கூட்டு சேர்பவர்கள் அனைவரும் குர்பா னியின் நிய்யத் வைத்திருக்க வேண்டுமா?
பதில் : அவசியமில்லை. ஆனால், அனைவரின் நிய்யத்தும் வணக்கமாக (இபாதத்தாக) இருக்க வேண்டும். எனவே ஒருவர் அகீகாவையும் மற்றவர் குர்பானியையும் நாடினாலும் கூடும். யாரேனும் ஒருவர் (இபாத)த்தை நாடாமல் வெறும் இறைச்சிக்காக மட்டுமே பங்கு சேர்ந்தால் அக்கூட்டு குர்பானி நிறை வேறாது.
கேள்வி : கூட்டு எப்போது சேர வேண்டும்? அனை வரும் பணம் போட்டு மொத்தமாக பிராணியை வாங்க வேண்டுமா? அல்லது ஒருவர் பிராணி வாங்கி வைத்து விட்டார். அவரிடம் சென்று தன்னை அதில் பங்காக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று சொல்வது கூடுமா? வேறு ஏதேனும் முறை கள் இருந்தாலும் விளக்குக?
பதில்: கூட்டு சேர்வதற்குப் பல முறைகள் உள்ளன:
1.            பிராணியை வாங்குவதற்கு முன்பாகவே அனைவரும் கூட்டு சேர்ந்துவிடுவது. இதுவே சிறப்பானதும் பேணுதலும் ஆகும்.
2.            முதலில் ஒருவர் ஒரு பங்கு அல்லது இத்தனை பங்குகள், எனக்குப்போக மீதமுள்ள பங்குகளில் யாரேனும் கூட்டு சேர்ந்தால் கூட்டு சேர்த்துக்கொள்வேன் என்ற எண்ணத் தில் பிராணியை வாங்கி பின்னர் மற்றவர்கள் அதில் பங்கு சேர்ந்தால் கூடும்.
3.            எந்த எண்ணமும் இல்லாமல் பிராணி வாங்கினார். பின்னர் மற்றவர்களை அதில் கூட்டாக்கினால் இம்முறையும் கூடும். அனைவரின் குர்பானியும் செல்லும்.
4.            வாங்கும்போது இப்பிராணி முழுவதையும் தன் ஒருவர் சார்பாக மட்டும் குர்பானி கொடுக்க வேண்டும் என்ற எண் ணத்துடன் வாங்கி, பின்பு அதில் பிறரைக் கூட்டாக்கினால் அப்போது பார்க்க வேண்டும் வாங்கியவர் யார்? அவர் குர்பானி வாஜிபாகும் அளவு வசதியுள்ள நிஸாபுடைய வராக இருந்து, இவ்வாறு மற்றவரை கூட்டு சேர்த்துக் கொண்டால் குர்பானி அனைவரின் தரப்பிலும் நிறைவேறும். எனினும், இது மக்ரூஹாகும்.
                மாறாக, குர்பானி கடமையாகாத நபராக இருந்து அவர் முழுவதையும் குர்பானி கொடுக்கும் நிய்யத்தில் வாங்கி யிருந்தால் இப்பொழுது அவர் பிறரைக் கூட்டு சேர்ப்பது கூடாது. ஏனெனில், குர்பானி கடமையாகாதவர் குர்பானி யின் நிய்யத்துடன் குர்பானி பிராணியை வாங்கிவிட்டால் அது நேர்ச்சை குர்பானி போன்று ஆகிவிடுகிறது. அதனை முழுமையாக நிறைவேற்றுவது அவசியமாகும்.
5.            குர்பானிப் பிராணியை அறுத்த பின்னர் கூட்டாகுதல். அதாவது அறுத்த பின்னர் ஒருவர் பணம் கொடுத்து எனக்காக ஒரு பங்கு கொடுங்கள் என்று கூட்டு சேர்வது கூடாது.
கேள்வி : கூட்டு சேர்ந்தவர்களில் ஒருவர் இறந்து விட்டால்....?
பதில் : கூட்டுக் குர்பானிக்காக கூட்டு சேர்ந்தவர்களில் யாரேனும் மரணித்து விட்டால், வாரிசுதாரர் அனுமதியளித் தால் அந்தப் பிராணியை குர்பானி கொடுக்கலாம். மரணித் தவர், மற்றுமுள்ள கூட்டாளிகளுக்கும் குர்பானி நிறைவேறும்.
வாரிசுதாரர் இவ்வாறு அனுமதியளிக்காத நிலையில் குர்பானி கொடுத்தால் கூடாது. மற்ற எவருக்கும் குர்பானி நிறைவேறாது.
கேள்வி : கூட்டுக் குர்பானியில் அறுக்கும்போது 7 நபர்களின் பெயரை சொல்ல வேண்டுமா?
பதில் : கூட்டுச் சேர்ந்திருக்கும் நபர்களின் பெயரை சொல்ல வேண்டிய அவசியமில்லை.  அறுக்கும் போது அவர் களை நிய்யத் செய்து கொள்ள வேண்டும். (கிஃபாயதுல் முஃப்தி, பாகம் 8, பக்கம் 184)
குர்பானி பிராணியை வாங்கும் போதோ அல்லது பணத் தை வாங்கும்போதோ நிய்யத் செய்தாலும் போதுமானதாகும்.
கேள்வி : குர்பானி பிராணி அறுக்கப்பட்ட பின் பங்கு வைத்தபின் பங்கு சேருவது கூடுமா?
பதில் : பங்குகள் முடிவு செய்யப்பட்டு அறுக்கப்பட்ட பின் பங்குகளை மாற்றுவதோ, அதை பிறருக்கு விற்றுவிடுவதோ கூடாது.
கேள்வி : கூட்டுக் குர்பானியை நிறைவேற்றிய பின், இறைச்சியை துல்லியமாக அளந்துதான் பங்கு பிரிக்க வேண்டுமா? அல்லது தோராய மாக பிரிக்கலாமா?
பதில் : கூட்டு சேர்ந்தவர்கள் தம் பங்கு இறைச்சியை பிரித்தே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை. பிரிக்காமல் மொத்தமாகவும் தர்மம் (ஸதகா) செய்துவிடலாம். ஆனால், யாரேனும் ஒருவர் தனது பங்கு வேண்டும் என்று கேட்டால், அவரது பங்கை பிரிப்பது அவசியமாகும். மேலும் எடை போட்டே பிரிக்க வேண்டும். தோராயமாக பிரிக்கக் கூடாது.
கேள்வி : ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் கூட்டு சேரலாம் என்று கூறுவது சரியா?
பதில் : ஒரு ஒட்டகத்தில் ஏழு பேர்தான் கூட்டு சேரமுடி யும். ஏழு நபர்களைவிட ஒருவர் அதிகமாக சேர்ந்தால் கூட யாருடைய குர்பானியும் நிறைவேறாது.
பத்து நபருக்கு ஒரு ஒட்டகை கொடுக்கலாம் என்று சில அறிவிப்புகளில் வந்தாலும் அதிகமான, ஸஹீஹான ஹதீஸ் களில் ஏழுபேர் என்றே வந்துள்ளது. மற்றும் நபி கணக்கிடப்படும்.
அவர்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள், இமாம்கள், நல்லடியார்கள், இதுவரை வந்த பேணுதலான முஸ்லிம்கள் அனைவரும் ஒரு ஒட்டகத்தில் ஏழுக்கு மேல் கூட்டு சேரவில் லை. ஆகவே சரியான வழி முறை ஒரு ஒட்டகத்தில் ஏழுபேர் வரை கூட்டுச் சேரலாம் என்பதுதான்.
1.            ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து யா ரசூலல்லாஹ் என் மீது புத்னா (ஒட்டகம்) கொடுப்பது கடமையாக உள்ளது. நான் செல்வந்தன் தான் ஆனால் அது வாங்கக் கிடைக்கவில்லையே? என்று கூறினார். உடன் நபி (ஸல்) அவர்கள் (அதற்கு பகரமாக) ஏழு ஆடுகளை வாங்கி அறுக்க ஏவினார்கள்.
(நூல்: அஹ்மது, இப்னுமாஷா அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
2.            ஒட்டகத்திலும், மாட்டிலும் ஒன்றில் ஏழு நபர் கூட்டாக்கிக் கொள்ளுமாறு எங்களை நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள்.
                   (நூல் : புஹாரி, முஸ்லிம் அறிவிப்பவர் : ஷாபிர் (ரலி))
3.            ஒட்டகத்திலும், மாட்டிலும் ஒன்றில் ஏழு நபர் கூட்டாகிக் கொள்ளுங்கள்” என்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல் : பர்கானி, அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி))
4.            ஜாபிர் (ரலி) அவர்கள், நாங்கள் பெருமானார் (ஸல்) அவர் களுடன் ஹஜ், உம்ரா செய்த போது எங்களில் ஏழு நபர் ஒரு ஒட்டகத்தில் கூட்டுச் சேர்ந்தோம் என்று கூறியபோது ஒருவர் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஒட்டகத்தில் கூட்டு சேர்வதுபோல் மாட்டில் கூட்டு சேரலாமா? என்று வினவிய போது மாடும் ஒட்டகம் (போன்று) தான் என்றார்கள்.
(நூல் : முஸ்லிம்)
5.            நாங்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட (உம்ரா வின்) வருடத்தில் ஒட்டகம் ஏழு நபருக்கும், மாடு ஏழு நபருக்குமாக அறுத்து பலியிட்டோம்.
(அறிவிப்பவர் : ஷாபிர் (ரலி))
6.            மாடும், ஒட்டகையும் ஏழு நபருக்காகும் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.            (நூல் : இப்னு அபீஷைபா)
7.            மாடு ஏழு நபருக்காகும், ஒட்டகையும் ஏழு நபருக்காகும் என்று அனஸ்(ரலி), ஸயீதுப்னுல் முஸய்யிப் (ரஹ்), ஹஸன் (ரஹ்) ஆகியோர் கூறினார்கள். (நூல் : இப்னு அபீஷைபா)
8.            நான் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்கள் அனை வரும் நிறைந்து வாழ்ந்த காலத்தில் அவர்கள் அனைவரும் மாட்டையும், ஒட்டகத்தையும் எழுவருக்காக அறுத்து பலி யிடுபவர்களாக கண்டேன்.
(நூல் : இப்னு அபீ ஜைபா கூறியவர் : ஷஅபீ)
9.            முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்கள் மாடும், ஒட்டகையும் ஏழு நபர்களுக்கு என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.        (அறிவிப்பவர் : இப்றாஹீம் நகயீ (ரஹ்))
10.          மாடும், ஒட்டகமும் ஏழுநபருக்காகும்.
(இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : இப்னுஅபீ ஷைபா, கூறியவர் : ஷஅபீ)
கேள்வி : குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஓர் ஆட்டை குர்பானி கொடுத்தால் போதுமா?
பதில் : குர்பானி கடமையான வீட்டில் உள்ள ஒவ்வொரு வரும் தனித்தனியாக ஒவ்வொரு ஆடு கொடுக்க வேண்டும். குடும்பத்தின் அனைவருக்கும் ஒரு ஆடு போதுமாகாது. இப்படி குர்பானி கடமையான முழு குடும்பத்தாருக்கும் ஒரு ஆடு மட்டும் குர்பானி கொடுத்தால் குர்பானி கொடுக்காத குற்றத் திற்கு அனைவரும் ஆளாவார்கள்.
அதே சமயம் குடும்பத்தில் ஒருவர் மீது மட்டும் குர்பானி கடமை, மற்றவர் மீது கடமையில்லை என்ற நிலையில் கடமை யான நபர் தனக்கு கொடுக்கப்படும் குர்பானியில் கடமையில் லாத மற்றவர்களின் பெயரை நன்மையில் சேர்த்துக் கொண் டால் கூடும்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை ஒரு ஆட்டை அறுத்து “யா அல்லாஹ்! இந்த குர்பானியை முஹம்மதிட (ஸல்) மிருந் தும், முஹம்மது (ஸல்) குடும்பத்தார், முஹம்மதின் (ஸல்) உம்மத் தினரிடமிருந்தும் ஏற்றுக்கொள்வாயாக” என்று கூறினார்கள்.                              
(நூல் : முஸ்லிம்)
இது போன்று முஸ்னது அஹ்மது என்ற ஹதீஸ் நூலில் “யா அல்லாஹ்! இந்த குர்பானி, உன்னை ஒருவன் என்று ஏற்றுக்கொண்ட எனது உம்மத்தினர் அனைவரின் சார்பாக” என்று (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆட்டில் குடும் பத்தினர், மற்றும் உம்மத்தினர், அனைவரையும் கூட்டாக்கி இருப்பது நன்மையில் மட்டும் தான் என்றே பொருள் கொள்ள முடியும். சிலர் கூறுவது போல் குர்பானி கடமையான அனை வருக்கு பகரமாக நபிகளாரே கொடுத்துவிட்டார்கள் என்று வைத்தால் நபிகளார் கொடுத்த இந்த குர்பானிக்குப்பின் இஸ்லாத்தில் குர்பானி என்ற வணக்கமே இல்லாமல் போயி ருக்க வேண்டும். இனி யாரும் குர்பானி கொடுக்க வேண்டிய தில்லை. அனைவரின் சார்பாக நான் கொடுத்து விட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கவேண்டும்.
ஆகவே, ஒரு குர்பானியுடன் கடமையாகாத பிறரை நன்மையில் சேர்த்துக்கொள்ளலாமே தவிர கடமையில் அறவே சேர்க்க முடியாது கூடாது.
அபூதாவூத், திர்மிதியில் இடம்பெற்றுள்ள “யா அல்லாஹ்! இந்த குர்பானி எனக்கும் உள்ஹிய்யா கொடுக்க(இயல)£தவ ருக்கு மாகும்” என்ற ஹதீஸின் மூலம் மேற்கூறிய கருத்தை தெளி வாகவிளங்க முடியும்.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து யா ரசூலல்லாஹ் என் மீது புத்னா (ஒட்டகம்) கொடுப்பது கடமையாக உள்ளது. நான் செல்வந்தன் தான் ஆனால் அது வாங்கக் கிடைக்கவில் லையே? என்று கூறினார். உடன் நபி (ஸல்) அவர்கள் (அதற்கு பகரமாக) ஏழு ஆடுகளை வாங்கி அறுக்க ஏவினார்கள்.
(நூல்: அஹ்மது, இப்னுமாஜா அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
ஒரு ஆடு குடும்பத்திற்காக போதுமென்றால் இந்த ஹதீஸில் ஏழு ஆடு கொடுக்கச் சொல்ல வேண்டிய அவசிய மில்லை.
மேலும் ஒரு ஆடு ஒரு நபருக்குத் தான் என்ற இப்னு உமர் (ரலி)ரின் அறிவிப்பும் (இஃலாவுஸ்ஸுனன் 17/213) இதையே தெளிவுபடுத்துகிறது.
கேள்வி : கடமையில்லாத நபர் குர்பானிக்காக பிராணி வாங்கிவிட்டால் அதன் சட்டம் என்ன?
பதில்: கடமையில்லாத நபர் குர்பானி பிராணியை வாங்கி விட்டால், அவர் அந்தப் பிராணியை குர்பானி கொடுப்பது வாஜிபாகிவிடும். ஏனெனில், அப்பிராணி (நத்ர்) நேர்ச்சை செய்யப்பட்டதன் சட்டத்திற்கு கீழ் வந்துவிடும். நேர்ச்சை செய்துவிட்டால் கட்டாயக் கடமையாகிவிடும்.
கேள்வி : குர்பானி பிராணி காணாமல் போய் விட்டால், அல்லது திருடப்பட்டு விட்டால், அல்லது மரணித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: இது போன்ற ஏதாவது காரணத்தால் பிராணி, கையை விட்டு நீங்கிவிட்டால் வாங்கியவர் குர்பானி கடமை யானவராக இருந்தால் கடமை நீங்காது. அவர் வேறு பிராணி யை வாங்கி அறுப்பது கடமையாகிவிடும்.
வாங்கியவர் கடமையாகாதவராக இருப்பின், வேறு பிராணி வாங்கி அறுக்க வேண்டியதில்லை.
கேள்வி:காணாமல் போன பிராணி திரும்பக் கிடைத்து விட்டால்?
பதில் : கடமையான நபர் வேறு பிராணி வாங்கி குர்பானி கொடுத்த பிறகு காணாமல் போன முதல் பிராணி வந்துவிட் டால் அதனை அறுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனினும், அதையும் குர்பானி கொடுப்பது சிறப்பாகும்.
கடமையாகாதவரிடமிருந்து காணாமல் போன பிராணி மீண்டும் வந்து விட்டால், அவர் அதைக் குர்பானி கொடுப்பது அவசியமாகும். இவர் காணாமல் போன பிராணிக்குப் பகரமாக வேறு பிராணியை குர்பானி கொடுத்திருந்தாலும் சரியே! ஏனெ னில் அது நேர்ச்சையின் சட்டத்தின் கீழ் வந்துவிடும்.
கேள்வி : மாடு, ஒட்டகம் போன்றதை முழுமை யாக தனி ஒருவர் தனக்காக மட்டும் குர்பானி கொடுக்கலாமா?
பதில்: ஆம், தாராளமாகக் கொடுக்கலாம்.
கேள்வி : வசதி பெற்றவர் குர்பானி கொடுக்காமல் இருந்து குர்பானியின் நாட்கள் முடிந்துவிட்டால் என்ன செய்வது? அவர்மீது ‘களா’ அவசியமா? அவசியமெனில், எவ்வாறு செய்ய வேண்டும்?
பதில்: மேற்சொன்ன நபர் ‘களா’ செய்வது அவசியமாகும். ‘களா’  என்பது பிராணியை வாங்காமலேயே இருந்து இவ்வாறு நாட்கள் கழிந்துவிட்டால் பிராணியின் விலை மதிப்பிற்கு (ஸதகா) தர்மம் செய்ய வேண்டும்.
குறிப்பு: பணமாக ஸதகா செய்யும்போது, ஓர் ஆட் டின் விலையைக் கொடுக்க வேண்டும். மாடு அல்லது ஒட்டகத்தின் ஏழு பங்கில் ஒன்றின் கிரயத்தை கொடுப் பது கூடாது.
பிராணி வாங்கியபின் இவ்வாறு கொடுக்காமல் காலம் முடிந்து விட்டால், அப்பிராணியை உயிருடன் (ஸதகா) தர்மம் செய்துவிட வேண்டும்.
கேள்வி : கழிந்த வருடத்தின் குர்பானியை இந்த வருடத்தில் கொடுத்து களா செய்யலாமா?
பதில்: கூடாது. அதன் கிரயத்தை ஸதகா செய்ய வேண்டும்.
கேள்வி : இரவு நேரங்களில் குர்பானி கொடுக்கலாமா?
பதில்: குர்பானி நாட்களில் எந்த நேரத்திலும் கொடுக்க லாம். இரவில் கொடுத்தால் கூடும். எனினும், பகலில் கொடுப் பது சிறப்பாகும்.
கேள்வி : குர்பானி பிராணியின் பால், முடி போன்றவற்றை பயன்படுத்தலாமா?
பதில்: குர்பானி பிராணியை சில நாட்களுக்கு முன்னரே வாங்கி வளர்ப்பது சிறப்பாகும். எனினும், இச்சமயத்தில் அதன் பாலை பயன்படுத்தக் கூடாது. ஸதகா (தர்மம்) செய்துவிட வேண்டும். முடியை வெட்டக்கூடாது. இவ்வாறு பாலை பயன் படுத்தினாலோ, முடியை வெட்டி பயன்படுத்தினாலோ அதன் கிரயத்தை ஸதகா (தர்மம்) செய்வது கடமையாகும்.
கேள்வி : மரணித்தவரின் சார்பாக குர்பானி கொடுப்பது கூடுமா?
பதில்: கூடும். இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள் ளவேண்டும். அதாவது, பொதுவாக, குர்பானி இறைச்சியை குர்பானி கொடுப்பவர் சாப்பிடலாம். ஆனால், மரணித்தவருக் காக குர்பானி கொடுப்பதில் இரண்டு முறைகள் உள்ளன.
1.            மரணித்தவர் தனக்காக குர்பானி கொடுக்குமாறு வஸிய் யத்தோ, கட்டளையோ இட்டிருந்து, அதற்காக குர்பானி கொடுத்தால், குர்பானி கொடுத்தவர்கள் அந்த இறைச் சியை சாப்பிடக்கூடாது. முழுவதுமாக ஸதகா தர்மம் செய்துவிட வேண்டும்.
2.            மரணித்தவர் ஏதும் சொல்லாமல் அவர்களாக குர்பானி கொடுத்திருந்தால் கொடுப்பவர் சாப்பிடலாம்.
கேள்வி : மரணித்தவர்கள் பெயரில் தருமம் செய் வது சிறந்ததா? குர்பானி கொடுப்பது சிறந்ததா?
பதில்: மரணித்தவர்களுக்கு குர்பானி நாட்களில்  நன்மை யைச் சேர்க்க பொருட்கள் தருமம் செய்வதை விட குர்பானி கொடுப்பதே சிறந்தது. ஏனெனில் ஸதகா செய்வதில் பொருள் மட்டுமே கொடுக்கிறோம். குர்பானி நிறைவேற்றுவதில் பொருளை கொடுப்பதுடன் தியாகத்தையும் வெளிப்படுத்து கிறோம்.       (ஃபதாவா ரஹீமிய்யா. பக்கம் 87, பாகம்2)
குர்பானி இறைச்சி, தோல் பற்றிய சட்டங்கள்...
கேள்வி : குர்பானி இறைச்சியின் சட்டம் என்ன?
பதில் : குர்பானி இறைச்சியை குர்பானி கொடுத்தவர் பின்வருமாறு உபயோகிக்கலாம்.
1.            இறைச்சி முழுவதும், குர்பானி கொடுத்தவர் மற்றும் அவர் குடும்பத்தாரே சாப்பிடுவது.
                (ஷாஃபிஈ மத்ஹபுப் படி: இறைச்சியில் சிறிதளவையேனும் தர்மம் (ஸதகா) செய்வது கடமையாகும். எனவே, அதுபோக மீதமுள்ள முழு இறைச்சியை சாப்பிடலாம்.)
2.            முழுவதையும் நண்பர்கள், உறவினர்களுக்கு அன்பளிப் பாக கொடுத்து விடுவது.
                (ஷாஃபிஈ மத்ஹபுபடி கடமையான கொஞ்ச இறைச்சியை ஸதகா செய்த பின்னர் இவ்வாறு அன்பளிப்பு செய்யலாம்.)
3.            முழுவதும் ஏழைகளுக்கு ஸதகா செய்து விடுவது.
4.            இறைச்சியை மூன்று பங்குகளாக்கி, அதில் ஒன்றை தமக்கும், தம் குடும்பத்தாருக்கும், மற்றொன்றை உறவினர் கள், நண்பர்களுக்கு அன்பளிப்பாகவும், மூன்றாவதை ஏழைகளுக்கு ஸதகாவாகவும் கொடுப்பது சிறப்பான விரும் பத்தக்க முறையாகும்.
கேள்வி : குர்பானி கறியை காஃபிர்களுக்கு கொடுக்கலாமா?
பதில் : காஃபிருக்கும் கொடுக்கலாம். ஆனால் நேர்ச்சை பிராணியின் கறி அத்தனையும் ‘ஸதகா’ செய்யப்பட வேண்டும். எனவே அந்த கறியை காஃபிருக்கு கொடுக்கக் கூடாது.
(இம்தாதுல் ஃபதாவா, பாகம் 3, பக்கம் 551)
(ஷாஃபிஈ மத்ஹப் படி குர்பானி பிராணியின் இறைச்சியை காஃபிர்களுக்கு கொடுப்பது கூடாது.)
கேள்வி : குர்பானி தோலின் சட்டம் என்ன?
பதில்: குர்பானி தோலை பதனிட்டு தானே பயன்படுத்த லாம். அல்லது பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். அல்லது ஏழைகளுக்கு ஸதகாவாக கொடுக்கலாம். விற்பது கூடாது. அப்படி விற்பனை செய்துவிட்டால் அக்கிரயத்தை ஏழைகளுக்கு ஸதகா செய்துவிடுவது கடமையாகும். அஃதன்றி அக்கிரயத்தை தான் பயன்படுத்துவதோ அல்லது பிறருக்கு அன்பளிப்பாக கொடுப்பதோ கூடாது.

கேள்வி : தோலை யாருக்குக் கொடுக்கக் கூடாது?
பதில்:1. மஸ்ஜித் கட்டடப் பணி, மராமத்துப் பணிகளுக்
                காகவும்,
2.            அறுத்து உரிப்பவர், உதவியாளர் ஆகியோருக்கு ஊதியமாகவும்,
3.            முஅத்தின், இமாம்ஆகியோருக்கு சம்பளமாகவும் கொடுப் பது கூடாது.
கேள்வி : மதரஸாக்களுக்கு கொடுக்கலாமா?
பதில்:மதரஸாவின் கட்டுமானப் பணி, மராமத்துப் பணிக ளுக்குக் கொடுக்காமல் அங்கு பயிலும் மாணவர்களுக்காக கொடுப்பது கூடும். மிக ஏற்றமானது. ஸதகாவின் நன்மையும், மார்க்கத்தை பாதுகாக்க உதவி புரிந்த நன்மையும் ஒரு சேர கிடைக்கும்.
கேள்வி : தோலை செல்வந்தர்களுக்கு கொடுக்க லாமா?
பதில்: தோல் தோலாக உள்ள நிலையில் செல்வந்தர் களுக்கு அன்பளிப்பாக கொடுப்பது கூடும். தோலை விற்று பணமாக ஆக்கிவிட்டால் அக்கிரயத்தை ஏழைகளுக்கு ஸதகா (தர்மம்) செய்வது வாஜிபாகும். செல்வந்தர்களுக்கு கொடுக்கக் கூடாது.
கேள்வி : குர்பானித் தோலை பள்ளிவாசலுக்கு கொடுத்து அதன் லாபத்தை நிர்வாகிகள் வியா பாரத்தில் முதலீடு செய்து ஏழைகளுக்கு செலவு செய்யலாமா?
பதில் : குர்பானித் தோலை பள்ளிவாசலுக்குக் கொடுத் தால்... கொடுப்பவரின் பிரதிநிதியாக நிர்வாகிகள் பெற்று அவர் கள் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தால் கூடும். முடிந்தவரை சீக்கிரம் பொறுப்பிலிருந்து நீங்கிக்கொள்ள வேண்டும். தேவை யின்றி தாமதம் செய்வது விரும்பத்தக்கதல்ல. அதே போன்று வியாபாரத்திலும் முதலீடு செய்யக் கூடாது. குர்பானி தோலின் பணத்தை தவறாக பயன்படுத்தினால் நிர்வாகிகள் குற்றவாளி யாவார்கள்.         (ஃபதாவா ரஹீமிய்யா, பாகம் 2, பக்கம் 167)
கேள்வி : சில இடங்களில் ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் பள்ளிவாசல் நிர்வாகிகள் குர்பா னித் தோல்களை மக்தப் (ஆரம்ப) பாடசாலை களுக்கு ஆசிரியரின் ஊதியமாக கொடுக்கிறார் கள். இவ்விதம் கொடுப்பதும், அதை சம்பளமாக பெறுவதும் கூடுமா? ஊர்க்கட்டுப் பாட்டை அஞ்சி இவர்களிடம் குர்பானித் தோலை கொடுப் பது சரியா? இப்படி நிர்பந்திக்கும் நிர்வாகிகள் பற்றியும், இதுபோலவே பள்ளி மாணவ, மாண வியரிடமிருந்து குர்பானித் தோலையோ குர்பா னித்தோல்  கொடுக்காத பட்சத்தில் முடிந்தளவு பணத்தையோ, வலுக்கட்டாயமாக பெறும் பள்ளி நிர்வாகிகள் பற்றியும் மார்க்கம் கூறுவதென்ன?
பதில்: குர்பானித்தோலையோ அதன் கிரயத்தையோ ஜகாத் பெறுவதற்கு தகுதியான ஏழை, நலிந்தோருக்கு ஸதகா செய்துவிட வேண்டும். செல்வந்தர்களுக்கு கொடுப்பது, மற்றும் பள்ளிவாசல் மதரஸா, மக்தப், இவைகளின் கட்டிட உபயோகத் திற்கு பயன்படுத்துவது இமாம்கள், முஅத்தின்கள், ஆசிரியர் கள், ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்குவது கூடாது. அது போல குர்பானிப் பிராணிகளை அறுப்பவருக்கோ, உரிப்பவருக் கோ குர்பானித்தோலையோ அல்லது கிரயத்தையோ கூலி யாக கொடுப்பது கூடாது!
பள்ளி நிர்வாகிகள் இதுபோன்று வற்புறுத்தி வசூல் செய் வதும், மேலே தடுக்கப்பட்ட வகையில் செலவு செய்யும் நிர்வாகத் தினருக்கு குர்பானி தோலை கொடுப்பதும் கூடாது. ஊர்க்கட்டுப் பாட்டை விட மார்க்கக் கட்டுப்பாடு உயர்ந்தது என்பதை நினை வில் கொள்ள வேண்டும். எந்த ரீதியிலும் வற்புறுத்தல் கூடாது.
கேள்வி : ஹராமான வருமானத்தின் மூலம் நிறை வேற்றப்பட்ட குர்பானி தோலை வசூலித்து மத்ரஸா மாணவர்களுக்கு கொடுப்பது கூடுமா?
பதில்: ஹராமான பொருளினால் குர்பானி கொடுப்பது பாவம் என்பது தனி விஷயம். எனினும், மார்க்கம் கூறும் முறையில் அறுக்கப்பட்ட பிராணியின் தோலை மத்ரஸா அல்லது ஏழைகளுக்கு கொடுத்துவிட வேண்டும்.
கேள்வி : குர்பானித்தோல் மூலம் கிடைக்கும் பணத்தை எந்த வகையில் பயன்படுத்தலாம்?
பதில்: ஜக்காத் வாங்க தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.
(நூல் : ஃபதாவா மஹ்மூதிய்யா பாகம் 4, பக்கம் 313)
குர்பானி பிராணியை அறுப்பதன் சட்டங்கள்...
கேள்வி : அறுப்பதன் முறைகள், நிபந்தனைகள் யாவை?
பதில்: குர்பானிக்கான நிபந்தனை ஒன்றாகும். பொது நிபந்தனைகள் மூன்றாகும். ஆக மொத்தம் 4.
1.            அறுப்பவர் முஸ்லிமாக இருப்பது.
2.            பிஸ்மில்லாஹ் சொல்லி அறுப்பது, பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என சொல்வது சிறப்பாகும்.
3.            தொண்டை குழிக்கும், தொண்டைக்கும் மத்தியிலுள்ள இரத்தம் ஓடும் இரு குழாய்களையும், மூச்சுக் குழாய், உண வுக்குழாய் மொத்தம் 4 குழாய்களை துண்டிக்க வேண்டும்.
4.            குர்பானி கொடுப்பதை நிய்யத் செய்வது.
அறுக்கும் போது பேண வேண்டிய விரும்பத் தக்கவையும், சுன்னத்துகளும்:
1.            கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளல்.
2.            பிராணிக்கு தண்ணீர் புகட்டல்.
3.            பிராணியை இடது விலாப்புறமாக படுக்க வைக்க வேண்டும். இடது கையால் பிராணியின் தலையை பிடித்து வலது கையில் கத்தி இருப்பது போன்று அமைத்துக் கொள்ள வேண்டும். வலது கால் மேலாக கட்டப்படாமல் இருக்க வேண்டும். முகத்தை கிப்லா வின் திசையில்  திருப்பிவைத்து அறுப்பது.
4.            மூன்று கால்களை கட்டியும், ஒரு காலை (வலது கால்) கட்டாமலும் வைத்திருப்பது.
5.            அறுப்பவர் கிப்லாவை முன்னோக்கி நின்று அறுப்பது.
6.            இயன்றால், குர்பானி கொடுப்பவரே அறுப்பது. முடியாவிட் டால் அறுக்கும்போது அவ்விடம் இருப்பது.
7.            இன்னீ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ்ஸ மாவாத்தி வல்அர்ள ஹனீஃபவ் வமா அன மினல் முஷ்ரி கீன். இன்ன ஸலாதீ வனுஸுகீ வமஹ்யாய வமமாதீ லில் லாஹி ரப்பில் ஆலமீன்” எனும் துஆவை ஓதுவது.
8.            அல்லாஹும்ம மின்க, வ இலைக அல்லாஹு அக்பர் என்று ஓதுவது.
9.            அறுத்த பின்னர் “யா அல்லாஹ்! முஹம்மத் (ஸல்) அவர் களிடமிருந்தும் உனது கலீல் இப்ராஹீம் (அலை) அவர் களிடமிருந்தும் நீ ஏற்றுக் கொண்டது போல் என்னிடமிருந் தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!” என துஆக் கேட்பது.
பிறருக்காக இருந்தால் ‘என்னிடமிருந்து’ என்பதற்குப் பதிலாக ‘இன்னாரிடமிருந்து’ என அவர் பெயரை கூற வேண்டும்.
மக்ரூஹ் - வெறுக்கத்தக்கவை
1.            பிராணியின் முன்னிலையில் கத்தியைத் தீட்டுவது.
2.            ஒரு பிராணியின் முன்னிலையில் மற்றொரு பிராணியை அறுப்பது.
3.            கழுத்தின் மேல் பாகத்தில் இருந்து அறுப்பது.
4.            அறுத்தவுடனே தோலை உரிப்பது. இது ஹராமாகும். அறுக்கப் பட்டு அதன் உயிர் போன பின்னர் உடல் சூடு தணிந்து பின்பே தோலை உரிக்க வேண்டும்.
5.            அறுப்பவர் கிப்லாவின் திசையை பின்னோக்கியவராக இருப்பது.
கேள்வி : கண் பார்வையற்றோர் அறுக்கலாமா?
பதில் : கண் பார்வை இருக்க வேண்டும் என்பது அறுப்ப தன் நிபந்தனைகளில் உள்ளதன்று. அறுக்கும் முறை பேணி கண் பார்வையற்றவர் அறுத்தாலும் கூடும். எனினும் அதில் குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் தவிர்ந்து கொள்வது நல்லது.
கேள்வி : ஊமை அறுத்தால் கூடுமா?
பதில் : முஸ்லிமான ஊமை அறுத்தால் கூடும். அவரால் நாவால் பிஸ்மில்லாஹ் கூற முடியாததை மன்னிக்கப்படும்.
கேள்வி : முஸ்லிம் அறுக்கும் போது மாற்று மதத் தவர் பிராணியை பிடித்திருந்தால் கூடுமா?
பதில் : மாற்று மதத்தவர் பிராணியை பிடிக்க முஸ்லிம் அறுத்தால் கூடும். ஹலாலாகும். ஏனெனில், பிராணியைப் பிடித்திருப்பவர் பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டுமென்ப தில்லை. மேலும், பிடித்திருக்கும் மாற்று மதத்தவர் பிஸ்மில் லாஹ் சொன்னாலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
குறிப்பு : மேற்சொன்ன சட்டம் பிராணியைப் பிடித்தல் என்ற உதவியைமட்டும் செய்தால்தான். ஆனால், அறுப்பவர் அறுக்கும் போது கத்தியை வேகமாக செலுத்த அல்லது அறுப்பவரின் கைக்கு வலு சேர்க்க போன்ற உதவிகள் செய் பவர் பிஸ்மில்லாஹ் சொல்வது அவசியமாகும். எனவே, அவ்வுதவியாளர் முஸ்லிமாக இருப்பது அவசியமாகும். இல்லாவிட்டால், அறுத்ததை சாப்பிடுவது ஹராமாகும்.

கேள்வி : குர்பானி பிராணியை மயக்கமுற  செய்தபின் அறுக்கலாமா?
பதில் : இவ்வாறு செய்வது சுன்னத்தான வழிமுறைக்கு மாற்றமாகும், மேலும் பிராணி மயக்கத்திலேயே இறந்ததற்கான சந்தேகமும் வந்து விடுகிறது. எனவே இம்முறை கூடாது.
                                     (கிஃபாயதுல் முஃப்தி, பாகம் 8, பக்கம் 256)
அறுப்பதற்கு ஷரீஅத் எந்த வழிமுறையை காட்டுகிறதோ அதுவே சிறந்ததாகும், சரியானதாகும். அறுப்பில் ரத்தம் முழு மையாக வெளியாகிறது. மயக்கமடையச் செய்வதினால் உடல் பலகீனமாவதுடன் ரத்த ஓட்டமும் குறைந்து ரத்தம் கறியுடன் கலந்து மனிதனுக்கு நோயை உண்டாக்குகிறது. இது ஷரீஅத்தின் முறைக்கு மாற்றமானதாகும்.
(இம்தாதுல் ஃபதாவா, பாகம் 3, பக்கம் 608)
கேள்வி : எந்தெந்த பொருட்களினால் அறுப்பது கூடும்?
பதில் : கூர்மையான எல்லா பொருட்களைக் கொண்டும் அறுக்கலாம். சில காட்டுவாசிகள் பல் மற்றும் நகத்தினால் பிராணிகளை அறுத்துவிடுவார்கள். எனவே நபி (ஸல்) அவர் கள் அவைகளின் மூலம் அறுப்பதை விரும்பவில்லை. (புகாரி, முஸ்லிம்) விரலை விட்டு நீங்கி தனியாக, கூர்மையாக உள்ள நகத்தைக் கொண்டு அறுப்பது கூடும். (ஷாஃபிஈ மத்ஹப் படி இதுவும் கூடாது.) தடிப்பமான பொருளினால் அறுப்பது கூடாது. ஏனெனில் குர்பானி அப்பொருளின் கனத்தினால் மரணமடைந் ததா? என்ற சந்தேகம் வந்து விடுகிறது.
(ஃபதாவா மஹ்மூதிய்யா, பாகம் 1, பக்கம் 46)
கேள்வி : பெண்கள் அறுத்ததைச் சாப்பிடலாமா?
பதில் : பெண்கள் அறுத்தாலும் அது ஹலாலாகும்.
கேள்வி : பிறருடைய குர்பானி பிராணியை அவ ருடைய அனுமதியின்றி அறுத்துவிட்டால்?
பதில் : பிறருடைய குர்பானி பிராணியை அவருடைய அனுமதியின்றி அறுத்துவிட்டால், அறுத்தவர் பிராணியின் உரிமையாளருக்காக நிய்யத் செய்து அறுத்திருந்தால் பிராணி யின் உரிமையாளரின் சார்பாக நிறைவேறிவிடும். மேலும், அறுத்தவரின் மீது எந்தக் குற்றப்பரிகாரமும் இல்லை.
அறுத்தவர் தனக்காக வேண்டி அறுத்திருந்தால் பிராணியின் உரிமையாளருக்கு இரண்டு விதமான உரிமைகள் உள்ளன.
1.            அறுக்கப்பட்ட பிராணியை தன் சார்பாக ஆக்கிக் கொண்டு, அறுக்கப்பட்ட பிராணியை எடுத்துக் கொள்ள லாம். அறுத்தவரின் மீது எந்தக் குற்றப்பரிகாரமும் இல்லை.
2.            அறுத்தவருக்காகவே இதனை ஆக்கிவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
கேள்வி : அமானிதமாக இரவலாக கொடுத்து வைக்கப்பட்ட பிராணியை கொடுத்துவைக்கப் பட்ட நபர் குர்பானிக்காக அறுத்து விட்டால் என்ன சட்டம்? குர்பானி நிறை வேறுமா?
பதில் : பிராணியின் உரிமையாளர் அறுக்கப்பட்ட பிராணியை தானே எடுத்துக் கொண்டாலும், அல்லது பிரா ணிக்குப் பகரமாக தண்ட பணம் வாங்கிக் கொண்டாலும் எந்த நிலையிலும் இக்குர்பானி நிறை வேறாது.
கேள்வி : இரண்டு பேர், தவறுதலாக ஒருவர் மற்றவரின் பிராணியை தன்னுடையது என எண்ணி அறுத்துவிட்டால் என்ன சட்டம்?
பதில் : இருவரின் குர்பானியும் நிறைவேறிவிடும். மேலும் யார்மீதும் குற்றப் பரிகாரம் கடமையில்லை.
கேள்வி : பெற்றோர் தனது பிள்ளைகளுக்காக குறிப்பாக பெண் பிள்ளைகளுக்காக நகைகள் சேர்த்து வைத்திருந்தால் அது ஜகாத் அளவு இருந்தால் அதில் குர்பானி கொடுப்பது அவசி யமா? குர்பானி அவசியம் என்றால் யாருக்காகக் கொடுக்க வேண்டும்?
பதில் : பருவமடையாத சிறுமிகளுக்குப் போடப்பட்டிருக் கும் நகைகள் பெற்றோரின் பங்கிலேயே சேர்க்கப்படும். பருவம டைந்த பெண் மக்களுக்குப் போடப்பட்டிருக்கும் நகைகள் அவர்களுக்கே சொந்தமாக கொடுக்கப்பட்டிருந்து, அது நிஸாப் அளவு இருந்தால், அப்பெண் தனியாக குர்பானி கொடுக்க வேண்டும். சொந்தமாக கொடுக்கப்படாமல் இருப்பின், பெற்றோ ரின் பங்கில் சேர்க்கப்படும்.
கேள்வி : குர்பானி கொடுக்க பிராணி வாங்கிய பின் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு ஒரு வாரம் இருக்கும் போது அந்த வீட்டில் ‘மவ்த்’ ‘இறப்பு’ சம்பவித்து விட்டால் குர்பானி கொடுக்கலாமா?
பதில்: குர்பானி யார் மீது கடமையாக இருந்ததோ, அவர் தாங்கள் கூறியபடி இறந்து போயிருந்தால், அவருக்காக குர்பானி செய்வது கடமையாகாது. குடும்பத்தில் வேறுயாரும் இறந்திருந்தால், குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர் கொடுத்தே ஆக வேண்டும்.
கேள்வி : ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானியை இறந்தவர்கள் பெயரில் கொடுக்கலாமா? நன் மைகள் யாருக்குக் கிடைக்கும்?
பதில் : மய்யித்தின் சார்பாக குர்பானி கொடுக்கலாம். இதில் சிறிது விளக்கம் உள்ளது. எனது பொருளிலிருந்து என் சார்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்று மய்யித் வஸிய்யத் செய்தி ருப்பின் அப்போது மய்யித்தின் பொருளிலிருந்து கொடுக்க வேண்டும். இப்போது குர்பானியின் இறைச்சி மற்ற பாகங்களை ஜகாத் வாங்கத் தகுதியான ஏழைகளுக்கு ஸதகா செய்வது அவசியம் ஆகும்.          (ஷாமி பக்கம் 293, பாகம் 5)
மய்யித் வஸிய்யத் செய்திருந்தாலும், செய்யாமல் இருந்தா லும் மய்யித்தின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் தமது பொருளினால் மய்யித்தின் சார்பாக நபில் குர்பானி கொடுப்ப தும் கூடும். இந்த இறைச்சியை வசதியுள்ளோர், வசதியற்றோர் அனைவரும் சாப்பிடலாம்.        (ஷாமி, பக்கம் 293, பாகம் 5)
தமது பொருளினால், தமது பெயர்வைத்து நபில் குர்பானி கொடுத்து ஒன்றோ அல்லது அதைவிட அதிகமான மய்யித்துக் களுக்கு இன்னும் சொல்லப்போனால், உயிருள்ளவர்களுக்குக் கூட அதனின் நன்மையை சேர்த்து வைக்கலாம். நபியவர்கள் உம்மத்தின் சார்பாக குர்பானி கொடுத்ததைப் போன்று, இந்த இறைச்சியை அனைவரும் சாப்பிடலாம்.
(ஃபதாவா ரஹீமிய்யா, பக்கம் 86, பாகம் 2)
கேள்வி : பெருநாள் தொழுகைகு முன் நஃபில் தொழலாமா?
பதில்: பெருநாள் தொழுகைக்குமுன் பெருநாள் தொழுகை நடக்கும் இடத்தில் எந்த நஃபில் தொழுகையும் தொழுவது மக்ரூஹ் - வெறுக்கத்தக்கதாகும். அப்படி தொழுது கொண்டி ருந்த ஒரு மனிதரை ஹள்ரத் அலி (ரலி) தடுத்து நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த வழிமுறையிலும் நன்மை இல்லை. மேலும் நபியின் வழிமுறைக்கு மாற்றம் செய்வதினால் உன்மீது அல்லாஹ்வின் வேதனை இறங்கிவிடுமோ என்ற பயம் எனக்குண்டு எனவும் எச்சரிக்கையும் செய்தார்கள்.
(ஃபதாவா ரஹீமிய்யா பாகம் 5, பக்கம் 52)
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகையை தொழுதார்கள். அதற்கு முன்போ பின்போ எந்த நஃபில் தொழுகையும் தொழவில்லை.
(நூல்:புகாரி, முஸ்லிம் அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி)
பெருநாள் தொழுகை முடிந்தபின் நஃபில் தொழ வேண்டு மானால் வீட்டில் தொழுது கொள்வது சிறப்பாகும்.
(ஃபதாவா தாருல் உலூம், பாகம் 5, பக்கம் 227. ரத்துல் முஹ்தார், பாகம் 1, பக்கம் 777)
கேள்வி : பஜ்ருக்கும் பெருநாள் தொழுகைக்கு மிடையில் எவ்வளவு நேரம் இடைவெளி தேவை? குறிப்பிட்ட நேரத்தைவிட சற்று தாமதிக்கலாமா?
பதில்: பஜ்ர் தொழுகை முடித்து சுன்னத்தான முறையில் தயாராகி வரும் அளவு இடைவெளி தேவையாகும்.  பெருநாள் தொழுகை வாஷிபாகும் அது தவறிவிட்டால் ‘களா’ செய்ய முடியாது. எனவே குறிப்பிடப்பட்ட நேரத்தை விட சில நிமிடம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தாமதம் செய்யலாம்.
இது போன்ற நேரங்களில் பொது மக்கள் சற்று பொறு மையாக இருக்க வேண்டும்.
(ஃபதாவா ரஹீமிய்யா பாகம் 3, பக்கம் 74)
கேள்வி : பெருநாள் தொழுகைக்கு வரும்போதும் முடிந்து திரும்பும்போதும் வெவ்வேறு பாதைகளில் செல்ல வேண்டுமா?
பதில்: நபி (ஸல்) பெருநாளுடைய தினத்தில் பாதையை மாற்றுவார்கள்.          (புகாரி அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி))
இந்த ஹதீஸின் அடிப்படையில் பாதையை மாற்றுவதே சிறந்ததாகும். ஏனெனில் முஸ்லிம்களின் ஒற்றுமை, கண்ணியம், சந்தோஜம் இதன் மூலம் வெளியாகின்றது (மஆரிஃபுல் ஹதீஸ், பாகம் 3, பக்கம் 407)

அகீகா
அகீகா என்பது ‘அக்குன்’ என்ற அரபி வேர் சொல்லில் இருந்த பிறந்த ‘கிழித்தல்’ என்ற அர்த்தத்தைக் கொண்ட வார்த்தையாகும்.
குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் போது உள்ள தலை முடிக்கும், ஏழாவது நாள் மழிக்கப்படும் முடிக்கும், அன் றைய தினம் அறுக்கப்படும் ஆட்டிற்கும் ‘அகீகா’ என்று சொல்லப்படும்.          (மழாஹிருல் ஹக், பாகம் 5, பக்கம் 65)
அரபியர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அகீகா கொடுத் துக் கொண்டிருந்தார்கள். அகீகா கொடுப்பதினால் சொந்தங் களுக்கும் அகீகா கொடுப்பவருக்கும் பல விதமான நன்மைகள் இருந்தன. எனவே நபி(ஸல்) அதை அப்படியே வைத்து விட் டார்கள். தானும் அதன்படி செய்தார்கள். மற்றவர்களையும் செய்ய ஆர்வ மூட்டினார்கள்.
கேள்வி : அகீகாவின் சட்டங்கள் என்ன?
பதில் : குழந்தை பிறந்த சந்தோஷத்திற்கு பகரமாக நன்றி தெரிவிக்கும் விதத்திலும் நோய் இன்னும் சோதனைகளிலி ருந்து பாதுகாப்புப்பெறவும் குழந்தை பிறந்த 7வது நாள் ஆண் பிள்ளைக்கு இரண்டு ஆடும், பெண் பிள்ளைக்கு ஒரு ஆடும் கொடுப்பது சுன்னத்தாகும்.
குழந்தையின் தலைமுடி அளவு தங்கம் அல்லது வெள்ளி யை ஏழைகளுக்கு தான தர்மம் செய்வது, குழந்தையின் தலை யில் குங்குமம் தடவுவது, “முஸ்தஹப்” விரும்பத்தக்கதாகும்.
குழந்தை தனது அகீகாவிற்கு பகரமாக அடமானப் பொரு ளாகும். எனவே, ஏழாவது நாள் அதன் பெயரை குறிப்பிட்டு அதன் சார்பாக ஆடு அறுக்கப்பட்டு, அதன் தலைமுடியை எடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                            (நூல் : திர்மிதி)
1.            அகீகா கொடுக்கப்பட்ட குழந்தை தனது பெற்றோருக்கு பரிந்துரை செய்யும், என ஹதீஸில் வருகிறது.
2.            அகீகா கொடுக்கும்வரை குழந்தை நோயிக்கு அருகிலும், ஜிஃபா- நிவாரணத்தை விட்டும் தூரமாகவும் இருக்கிறது.
3.            நபி (ஸல்) ஹஸன் (ரலி) அவர்களுக்கு ஒரு ஆட்டை அறுத்து அகீகா கொடுத்தார்கள். *மேலும் தலைமுடியை எடுத்து அதனளவு வெள்ளியை தான தர்மம் செய்யுமாறு மகள் பாத்திமா (ரலி)க்கு கட்டளையிட்டார்கள்.
(நூல் : திர்மிதி)
4.            இஸ்லாத்திற்கு முந்திய காலத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டை அறுத்து அதன் இரத்தத்தை தலையில் தடவு வோம். அல்லாஹ் இஸ்லாத்தை தந்தபின் நாங்கள் 7ம் நாள் ஆட்டை அறுத்து, குழந்தையின் தலைமுடியை எடுத்து, அதன் தலையில் குங்கமப்பூ தடவுவோம் என அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள். (நூல்: அபூதாவூத் 2:36)
5.            ஆண் பிள்ளைக்கு இரண்டு ஆடும், பெண் பிள்ளைக்கு ஒரு ஆடும் அகீகா கொடுக்க வேண்டும் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (ஃபதாவா ரஹீமிய்யா, பாகம் 2, பக்கம் 92)
6.            குழந்தை அல்லாஹ்வின் அருட்கொடையாகும். வசதி யுள்ளவர்கள் அகீகா கொடுத்து நன்றி செலுத்த வேண்டும். அதற்கு நன்றி செலுத்தாதவரை குழந்தை அல்லாஹ்விடம் அடமானப் பொருளாகவே இருக்கும்.
(மஆரிஃபுல் ஹதீஸ், பாகம்6, பக்கம் 26)
கேள்வி : அகீகா எத்தனை வயது வரை கொடுக்கலாம்?
பதில் : அகீகாவின் பிராணி யை 7ம்நாள் அல்லது 14 அல்லது 21ம் நாள் அறுக்க வேண்டும் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள் (தப்ரானி).
7ம் நாள் கொடுக்க முடியாவிட்டால் பருவ வயது அடை யும்வரை கொடுக்கலாம். சிலர் நேரம் எதுவும் வரையரை இல்லை என்கிறார்கள். அகீகா விரும்பதக்க ஒரு காரியம். எனவே அதை விரைவாக நிறைவேற்ற வேண்டும். காரண மின்றி தாமதப் படுத்தக் கூடாது.
(ஃபதாவா ரஹீமிய்யா, பாகம் 2, பக்கம் 93)
கேள்வி : குழந்தையின் அகீகா யார் கொடுக்க வேண்டும்? சொந்தக் காரர்கள் கொடுக்கலாமா?
பதில் : குழந்தையின் செலவு யார் மீது கடமையோ அவர் களே அகீகாவும் கொடுக்க வேண்டும். தந்தையிடம் வசதியில் லை என்றால் தாய் கொடுக்க வேண்டும். இருவரிடமும் வசதி இல்லை என்றால் கடன் வாங்கி அகீகா கொடுக்க வேண்டிய அவசியமில்லை.      (ஃபதாவா ரஹீமிய்யா, பாகம் 2, பக்கம் 94)
பெற்றோர்களிடம் வசதி இல்லாததினால் அவர்களின் அனுமதியுடன் சொந்தக்கார்கள் அகீகா கொடுத்தால் போது மாகும். திரும்பக் கொடுக்கத் தேவையில்லை.
(ஃபதாவா ரஹீமிய்யா, பாகம் 6, பக்கம் 172)
கேள்வி : ஆண் பிள்ளைக்கு இரண்டு ஆடு கொடுத்தே ஆக வேண்டுமா?
பதில் : வசதி இருந்தால் இரண்டு ஆடு, வசதியில்லாத போது ஒரு ஆடு கொடுத்தாலும் போதும்.
கேள்வி : மாடு ஒட்டகத்தின் ஏழு பங்கில் அகீகா கூட்டு சேரலாமா?
பதில் : மாடு, ஒட்டகத்தில் கூட்டு சேரலாம்.
(ஃபதாவா ரஹீமிய்யா, பாகம் 2, பக்கம் 94)
கேள்வி : மரணித்த பிள்ளைக்காக அகீகா கொடுக்கலாமா?
பதில் : அகீகா உயிரோடு இருப்பவர்களுக்காக கொடுப்பதா கும். மரணித்தவருக்காக அகீகா கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை. அப்படி கொடுத்தால் ஒப்புக் கொள்ளப்படலாம். ஹஜ் செய்யாத ஒருவர் ‘வஸிய்யத்’ மரண சாசனம் செய்யாமல் மரணித்து விட்டார். அவருடைய பிள்ளைகள் அவருக்கு மன்னிப்பை ஆதரவு வைத்து ‘பத்லே ஹஜ்’ பகரமாக ஹஜ் செய்தால், அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக் கையுள்ளதோ, அதைப் போன்று மரணித்த தனது பிள்ளைக் காக அகீகா கொடுத்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையுள்ளது. இன்னேரத்தில் குர்பானி ஆட்டுடன் சேர்க்காமல் அகீகாவின் ஆட்டை தனியாக வைப்பதே பேணு தலாகும்.           (ஃபதாவா ரஹீமிய்யா, பாகம் 6, பக்கம் 173)
கேள்வி : அகீகாவிற்காக ஆட்டை வாங்கியபின், அறுப்பதற்கு முன் குழந்தை மரணித்து விட்டால் என்ன செய்வது?
பதில் : வாங்கிய ஆட்டை விற்று அதன் காசை மதரஸா வின் மாணவர்களுக்கு கொடுப்பதும், அதை மாணவர்கள் வாங்குவதும் கூடும். (ஃபதாவா ரஹீமிய்யா, பாகம் 11 பக்கம் 351)
கேள்வி : ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளின் அகீகாவிற்காக ஒரு மாட்டை கொடுக்கலாமா? அல்லது மீதி பங்கையும் சேர்க்க வேண்டுமா? குர்பானியுடன் அகீகாவிற்காக கூட்டு சேரலாமா?
பதில் : இரண்டு ஆண் பிள்ளைகளுக்காக ஒரு மாட்டை முழுவதுமாக அகீகா கொடுக்கலாம். யாரையும் சேர்க்க வேண் டிய அவசியமில்லை. குர்பானியின் மாடு, ஒட்டகத்துடன் அகீகாவிற்காக கூட்டு சேரலாம்.
(ஃபதாவா ரஹீமிய்யா, பாகம் 4, பக்கம் 326)
கேள்வி : அல்லாஹ்விற்காக என்று விடப்பட்ட ஆட்டை அகீகாவிற்காக கொடுக்கலாமா?
பதில் : கூடாது. ஏனெனில் இது நேர்ச்சை செய்யப்பட்டது. நேர்ச்சை செய்யப்பட்டதை அதற்காக மட்டுமே கொடுக்க வேண்டும். எனவே இந்த ஆட்டை அகீகாவிற்கோ, குர்பானிக் காகவோ கொடுக்கக் கூடாது.
(கிஃபாயதுல் முஃப்தி, பாகம் 8, பக்கம் 202)
கேள்வி : அகீகாவின் கறியை பெற்றோர் சாப்பிடலாமா?
பதில்: தாராளமாக சாப்பிடலாம்.
(கிஃபாயதுல் முஃப்தி, பாகம் 8, பக்கம் 243)
இறைச்சி, தோல், போன்ற அனைத்திலும் அகீகா குர்பானி போன்றுதான்.
(தொகுப்பு : மௌலானா முஃப்தி முஹம்மது ஃபாரூக் காஷிஃபி காஸிமி)